Advertisment

மாதம் ரூ.20 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு; ரூ.30 லட்சம் ரிட்டன்: டாப் 5 மியூச்சுவல் ஃபண்டு ஸ்கீம்கள்!

கடந்த 5 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த 5 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் இங்குள்ளன. இந்தப் ஃபண்டுகளில் மாதம் ரூ.20 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.30 லட்சம் ரிட்டன் கொடுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Do you know the large cap funds that gave 96 percent growth in 5 years

கடந்த 5 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.

மியூச்சுவல் ஃபண்டு முதலீடு | சராசரி ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் அளவிலான திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்தப் பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவுக்கான காரணம், ஸ்திரத்தன்மையைப் பேணுவதும் அதிக வருமானத்தைப் பெறுவதும் ஆகும்.
அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா (ஏஎம்எஃப்ஐ) படி, மல்டிகேப் வகை மியூச்சுவல் ஃபண்ட் அதன் முதலீடுகளில் குறைந்தது 75 சதவீதத்தை ஈக்விட்டி மற்றும் ஈக்விட்டி தொடர்பான கருவிகளில் வைத்திருக்க வேண்டும்.

Advertisment

குவாண்ட் ஆக்டிவ் ஃபண்டு

குவாண்ட் ஆக்டிவ் ஃபண்டு ஐந்தாண்டு காலத்தில் 33.51 சதவீத வருடாந்திர வருமானத்துடன் இந்த ஃபண்ட் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நிர்வாகத்தின் கீழ் உள்ள நிதியின் சொத்துகள் (AUM) ரூ. 10,758 கோடி, அதன் நிகர சொத்து மதிப்பு (NAV) 778.9542 ஆகும். ஃபண்டில் உள்ள ரூ.20,000 மாதாந்திர எஸ்.ஐ.பி ஐந்தாண்டு காலத்தில் ரூ.29,21,674 ஆக மாறியுள்ளது.

நிப்பான் இந்தியா மல்டி கேப் ஃபண்ட்

நிப்பான் இந்தியா மல்டி கேப் ஃபண்ட் ஐந்தாண்டு காலக்கட்டத்தில் 35.56 சதவீத வருடாந்திர வருமானத்தை அளித்துள்ளது. நிதியின் AUM ரூ. 34,943 கோடி, அதன் NAV மதிப்பு ரூ.319.6448 ஆகும். ஃபண்டில் ரூ. 20,000 மாத எஸ்ஐபி இன்றைய தேதியின்படி ரூ.28,55,112 ஆகிவிட்டது.

மஹிந்திரா மேனுலைஃப் மல்டி கேப் ஃபண்ட்

மஹிந்திரா மேனுலைஃப் மல்டி கேப் ஃபண்ட் ஐந்தாண்டு காலக்கட்டத்தில் 32.59 சதவீத வருடாந்திர SIP வருமானத்தை அளித்துள்ளது. இந்த நிதியின் சொத்து மதிப்பு ரூ.4,091 கோடி, அதன் என்ஏவி விலை ரூ.39.9380 ஆகும். ஃபண்டில் குறைந்தபட்ச எஸ்ஐபி முதலீடு ரூ. 500 ஆகும். ஃபண்டில் ரூ.20,000 மாதாந்திர எஸ்ஐபி ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.26,63,838 கொடுத்துள்ளது.

பரோடா பிஎன்பி பரிபாஸ் மல்டி கேப் ஃபண்ட்

பரோடா பிஎன்பி பரிபாஸ் மல்டி கேப் ஃபண்ட் 29.5 சதவீத வருடாந்திர SIP வருமானத்தை இந்த நிதி வழங்கியுள்ளது. இதன் சொத்து மதிப்பு ரூ.2,459 கோடி, அதன் என்ஏவி விலை ரூ.314.6084. ஃபண்டில் குறைந்தபட்ச மொத்தத் தொகை முதலீடு ரூ. 5,000, அதே சமயம் ஃபண்டில் குறைந்தபட்ச எஸ்ஐபி முதலீடு ரூ.500 ஆகும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20,000 மாதாந்திர எஸ்ஐபியைத் தொடங்கியவர் போர்ட்ஃபோலியோவில் ரூ.24,76,833 வைத்துள்ளார்.

ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மல்டிகேப் ஃபண்ட்

ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் மல்டிகேப் ஃபண்ட் ஐந்தாண்டு காலத்தில் எஸ்.ஐ.பி வருமானம் 29.35 சதவீதம். நிதியின் AUM ரூ.13,025 கோடி, அதன் என்ஏவி ரூ.852.9400 ஆகும். ஃபண்டில் குறைந்தபட்ச மொத்தத் தொகை முதலீடு ரூ. 5,000, குறைந்தபட்ச எஸ்ஐபி முதலீடு ரூ.100 ஆகும். ஃபண்டில் ரூ.20,000 மாதாந்திர எஸ்ஐபி ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.24,68,079 கொடுத்துள்ளது.

நிதி முதலீடு- ஆலோசனை

மேற்கூறிய இந்த மியூச்சுவல் ஃபண்டுகள் கடந்த 5 ஆண்டுகளில் 30 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்துள்ளன. இது தகவலுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. முதலீடு தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் செபியில் பதிவுசெய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகரிடம் முதலீடு தொடர்பாக பேசி தெரிந்துக்கொள்ளவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Mutual Fund
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment