mutual funds | தீபாவளி, தந்தாரேஸ் பண்டிகை தினங்களில் தங்கம், மியூச்சுவல் ஃபண்ட், பங்குகளில் முதலீடு செய்யும் பழக்கம் வட இந்தியர்கள் இடையே அதிகரித்து காணப்படுகிறது.
இந்தப் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்தியாவிலும் அதிகமாக காணப்படுகிறது. பொதுவாக தென்னிந்தியாவை பொருத்தமட்டில் தங்கத்தில் முதலீடு அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த 6 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இதில் முதலிடத்தில் குவாண்ட் ஃப்ளக்ஸி கேப் ஃபண்ட் திட்டம் உள்ளது. இதில் கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 23.72 சதவீதம் ரிட்டன் கிடைத்துள்ளது.
அடுத்த இடத்தில் ஆதித்யா பிர்லா சன் ஃலைப் ஃப்ளக்ஸி கேப் ஃபண்ட் உள்ளது. இதில் 17.52 சதவீதமும், மூன்றாம் இடத்தில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி ஃப்ளக்ஸி கேப் ஃபண்டில் 17.52 சதவீத வருமானமும் கிடைத்துள்ளது.
4ம்,5ம் இடங்கள் முறையே டிஎஸ்பி ஃப்ளக்ஸி கேப் ஃபண்ட் மற்றும் கனரா ரொபேக்கா ஃப்ளக்ஸி கேப் ஃபண்ட் முதலீட்டு திட்டங்கள் உள்ளன.
இந்த முதலீட்டு திட்டங்களில் முறையே 17.12 மற்றும் 15.30 சதவீதம் வட்டி கிடைத்துள்ளது. 6ஆம் இடத்தில் உள்ள யூடிஐ ஃப்ளக்ஸி கேப் ஃபண்டில் 15.12 சதவீதம் வருமானம் கிடைத்துள்ளது.
பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்கள் சந்தையை மையமாக கொண்டவை ஆகும். ஆகவே இதில் இடர்பாடுகள் அதிகம் என்பதையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“