கேஷ்பேக் ஆஃபர்களை அள்ளித் தரும் 5 கிரெடிட் கார்டுகள்... இத நோட் பண்ணுங்க மக்களே!

சலுகைகளை வழங்கும் கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது நல்லது. பணத்தை மீண்டும் பெறும் (கேஷ்பேக்) சலுகைகளை வழங்கும் சிறந்த 5 கிரெடிட் கார்டுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

சலுகைகளை வழங்கும் கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது நல்லது. பணத்தை மீண்டும் பெறும் (கேஷ்பேக்) சலுகைகளை வழங்கும் சிறந்த 5 கிரெடிட் கார்டுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Credit card offers

கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் போது, அவற்றில் கிடைக்கும் கேஷ்பேக் சலுகைகளை கருத்தில் கொள்வது மிகவும் முக்கியம். சில கார்டுகள் கேஷ்பேக் சலுகைகளையும், ஷாப்பிங் தள்ளுபடிகளையும் வழங்குகின்றன. அதே சமயம், வேறு சில கார்டுகள் விமான நிலைய ஓய்வறைகளுக்கான பிரத்யேக அணுகல் மற்றும் கோல்ஃப் மைதானங்களை பயன்படுத்துவதற்கான சலுகைகளை வழங்குகின்றன.

Advertisment

ஆகவே, சலுகைகளை வழங்கும் கிரெடிட் கார்டுகளை தேர்ந்தெடுப்பது நல்லது. பணத்தை மீண்டும் பெறும் (கேஷ்பேக்) சலுகைகளை வழங்கும் சிறந்த 5 கிரெடிட் கார்டுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

எஸ்.பி.ஐ கேஷ்பேக் கார்டு (SBI Cashback Card): இந்த கார்டு ஆன்லைன் செலவினங்களுக்கு 5% கேஷ்பேக் வழங்குகிறது. மேலும், ஆஃப்லைன் செலவினங்களுக்கு 1% கேஷ்பேக் கிடைக்கும்.

ஆக்ஸிஸ் பேங்க் ஏஸ் கிரெடிட் கார்டு (Axis Bank Ace Credit Card): இந்தக் கார்டு கூகிள் பே மூலம் செய்யப்படும் பில் பேமெண்ட்கள் (மின்சாரம், இணையம், எரிவாயு மற்றும் பல), DTH மற்றும் மொபைல் ரீசார்ஜ்களுக்கு 5% கேஷ்பேக் வழங்குகிறது. Swiggy, Zomato மற்றும் Ola-வில் 4% கேஷ்பேக் மற்றும் பிற அனைத்து செலவினங்களுக்கும் 1.5% கேஷ்பேக் கிடைக்கும்.

Advertisment
Advertisements

அமேசான் பே ஐ.சி.ஐ.சி.ஐ கிரெடிட் கார்டு (Amazon Pay ICICI Credit Card): இந்த கார்டு, அமேசானில் செலவளிக்கும் ஒவ்வொரு ரூ. 100-க்கும் புள்ளிகளை வழங்குகிறது. பிரைம் உறுப்பினர்களுக்கு 5X புள்ளிகளும், பிரைம் அல்லாத உறுப்பினர்களுக்கு 3X புள்ளிகளும் கிடைக்கும்.

ஃப்ளிப்கார்ட் ஆக்ஸிஸ் பேங்க் கிரெடிட் கார்டு (Flipkart Axis Bank Credit Card): Myntra-வில் செலவளிக்கும் தொகைக்கு 7.5% கேஷ்பேக் கிடைக்கும். Flipkart மற்றும் Cleartrip-இல் செலவளிக்கும் தொகைக்கு 5% கேஷ்பேக் கிடைக்கும். மேலும், சில கடைகளில் செலவளிக்கும் தொகைக்கு வரம்பற்ற 4% கேஷ்பேக் கிடைக்கும்.

ஹெச்.டி.எஃப்.சி மில்லினியா கிரெடிட் கார்டு (HDFC Millennia Credit Card): Amazon, BookMyShow, Cult.fit, Flipkart, Myntra, Sony LIV, Swiggy, Tata CLiQ, Uber மற்றும் Zomato-வில் 5% கேஷ்பேக் வழங்குகிறது. பிற செலவினங்களுக்கு 1% கேஷ்பேக் கிடைக்கும்.

Credit card

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: