2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள மற்றும் 60 வயதுக்குட்பட்ட அனைத்து நபர்களுக்கும் ஐடிஆர் தாக்கல் கட்டாயமாகும். அதேநேரம், மூத்த குடிமக்களுக்கு, ஆண்டு வருமானம் ரூ .3 லட்சத்துக்கு கீழ் இருந்தால், ஐடிஆர் தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் விஷயத்தில், அவர்களின் வருமானமானது ஓய்வூதியம் மற்றும் வைப்புத்தொகையின் வட்டி மட்டுமே என்றால் ஐடிஆர் தாக்கல் தேவையில்லை.
2020-21 நிதியாண்டிற்கான (AY 2021-22) வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டிய கடைசித் தேதி செப்டம்பர் 30. ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டிய தேதி நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், வரி செலுத்துவோர் இந்த மாதத்திலேயே தங்கள் ரிட்டர்ன்களை தாக்கல் செய்ய முயற்சிக்க வேண்டும். வரி தாக்கல் என்பது ஒரு வருடாந்திர பொறுப்பு மற்றும் அதை சீக்கிரம் செய்வது நல்லது. இருப்பினும், வரி செலுத்துவோர் செய்யும் சில தவறுகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
சேமிப்புக் கணக்கின் வட்டி வருமானத்தை தெரிவிக்காதது
பல தனிநபர்கள் சேமிப்புக் கணக்குகளிலிருந்து வட்டி வருமானத்தை வருமான வரி தாக்கலில் குறிப்பிட மறுக்கிறார்கள். இருப்பினும், வருமான வரி விதிகளின்படி, சேமிப்புக் கணக்கு வைப்புகளிலிருந்து உங்கள் வட்டி வருமானத்தைக் காட்ட வேண்டும்.
வருமான வரி பிரிவு 80 TTA இன் கீழ், சேமிப்புக் கணக்கில் ரூ .10,000 வரை சம்பாதித்த வட்டிக்கு, தனிநபர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அதேநேரம் மூத்த குடிமக்களுக்கு, இந்த விலக்கு வரம்பு பிரிவு 80TTB இன் கீழ் ரூ .50,000 ஆகும்.
நிலையான வைப்புகளின் வட்டி வருமானத்தை குறிப்பிடாதது
நிலையான வைப்பு கணக்குகளிலிருந்து பெறப்படும் வட்டி வருமானம் வருமான வரி சட்டத்தின் கீழ் வரி விதிப்புக்கு உட்பட்டது. எனவே, இந்த வருமானத்தை உங்கள் ஐடிஆரில் சேர்க்க வேண்டும்.
தவறான ஐடிஆர் படிவத்தை தாக்கல் செய்தல்
பல்வேறு வகையான வருமான ஆதாரங்களுக்கு தனித்தனி ஐடிஆர் படிவங்கள் உள்ளன. எனவே, உங்கள் வருமான ஆதாரங்களுக்கு பொருந்தும் ஐடிஆர் படிவத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும்
இ-சரிபார்ப்பை மறத்தல்
ரிட்டர்ன்களை தாக்கல் செய்த 120 நாட்களுக்குள் ஐடிஆரின் இ-சரிபார்ப்பு கட்டாயமாகும். நீங்கள் மின்-சரிபார்க்கத் தவறினால், உங்கள் ஐடிஆரின் செயலாக்கம் பாதிக்கப்படும். உங்கள் நெட்-பேங்கிங் கணக்கு, ஆதார் OTP போன்றவற்றின் மூலம் மின்-சரிபார்ப்பை எளிதாக செய்ய முடியும்.
வரி சேமிப்பை மேம்படுத்த புதிய vs பழைய வரி விதிப்பை ஒப்பிடவில்லை
இந்த ஆண்டு புதிய மற்றும் பழைய வரி விதிப்புகளின் கீழ் ஐடிஆர் தாக்கல் செய்ய உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. பழைய வரி விதிப்பில், நீங்கள் விலக்குகளையும் தளர்வுகளையும் பெறுவீர்கள், அதே நேரத்தில் புதிய வரிவிதிப்பின் கீழ், அனைத்து விலக்குகள் மற்றும் தளர்வுகளுக்கு வரி விகிதம் குறைவாக உள்ளது. உங்கள் வரி சேமிப்பை மேம்படுத்த இரண்டில் சிறந்ததை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மனைவி, குழந்தைக்கு பரிசாக வழங்கப்பட்ட பணத்தின் மீது கிடைக்கும் வட்டியை புறக்கணித்தல்
உங்கள் மனைவி அல்லது குழந்தைக்கு நீங்கள் பரிசளித்த பணத்தில் கிடைக்கும் வட்டியிலிருந்து வருமானத்தை சேர்ப்பது கட்டாயமாகும். பரிசளித்த பணத்தை முதலீட்டிற்கு பயன்படுத்தும் போது கிடைக்கும் இத்தகைய வட்டியை வரி தாக்கலில் குறிப்பிட வேண்டும்.
ஈவுத்தொகை வருமானத்தை தெரிவிக்காதது
ஈக்விட்டி அல்லது மியூச்சுவல் ஃபண்டிலிருந்து ஈவுத்தொகை வருமானம் முன்பு வரி இல்லாததாக கருதப்பட்டது. இருப்பினும், 2020-21 நிதியாண்டிலிருந்து, தனிநபர்கள் ஈக்விட்டி மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து ஈட்டிய ஈவுத்தொகைக்கு ஸ்லாப் விகிதத்தில் வரி விதிக்கப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு நீங்கள் உங்கள் ஐடிஆரில் ஈவுத்தொகை வருமானத்தை அறிவித்து அதற்கேற்ப வரி செலுத்த வேண்டும்.
படிவம் 26AS விவரங்களுடன் வருமானம் மற்றும் TDS பொருந்தவில்லை
படிவம் 26AS என்பது நிதியாண்டில் நீங்கள் பெற்ற அனைத்து வருமான விவரங்களையும் கொண்ட வருடாந்திர வரி அறிக்கையாகும். எனவே, ஐடிஆரில் நீங்கள் வழங்கிய விவரங்கள் படிவம் 26 ஏ -வில் உள்ள வருமான விவரங்களுடன் பொருந்த வேண்டும். ஐடிஆர் -இல் காட்டப்பட்டுள்ள வருமானம் படிவம் 26 ஏஎஸ் -ல் உள்ள வருமானத்துடன் பொருந்தவில்லை என்றால் நீங்கள் வருமான வரித் துறை நோட்டீஸ் அல்லது குறைவான வருமான வரித் தொகையைப் பெறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.