Small-cap funds: ஸ்மால் கேப் ஃபண்டுகள் அதிக வளர்ச்சியைக் கொண்ட நிறுவனங்களில் கவனம் செலுத்துகின்றன. மேலும், ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் கடந்த சில ஆண்டுகளாக முதலீட்டாளர்களுக்கு குறிப்பிடத்தக்க வருமானத்தை அளித்து தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த நிதிகள் முதலீட்டாளர்களுக்கு குறுகிய கால இடைவெளியில் கூட ஈர்க்கக்கூடிய இரட்டை இலக்க வருவாயை வழங்குகின்றன. இந்த நிதிகளில் சில, தொடர்ச்சியான காலத்தில் சிறப்பாகச் செயல்பட முடிந்தவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
வ.எண் |
மியூச்சுவல் பண்ட் பெயர் |
10 ஆண்டுகளில் ரிட்டன் |
01 |
நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் |
30.38% |
02 |
எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் |
27.95% |
03 |
டிஎஸ்பி ஸ்மால் கேப் ஃபண்ட் |
26.21% |
04 |
கோடக் ஸ்மால் கேப் ஃபண் |
24.64% |
05 |
HDFC ஸ்மால் கேப் ஃபண்ட் |
22.28% |
06 |
சுந்தரம் ஸ்மால் கேப் ஃபண்ட் |
22.34% |
07 |
ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஸ்மால் கேப் ஃபண்ட் |
19.82% |
இதற்கிடையில், பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் புதிய நிதிச் சலுகைகளை (NFOs) அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், முதலீட்டாளர்களுக்கு எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்ட வருமானத்தை ஈட்டிய சில சிறந்த செயல்திறன் கொண்ட பரஸ்பர நிதிகள் உள்ளன.
மேலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெவ்வேறு சந்தை மூலதனமயமாக்கலின் கீழ் வகைப்படுத்த விரும்புகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“