Advertisment

வரி விலக்கு ஃபிக்ஸட் டெபாசிட்: இந்த 5 வங்கி வட்டியை செக் பண்ணுங்க!

மூத்த குடிமக்களுக்கான சிறப்பு விகிதம் உள்பட, வரி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்புகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்கும் ஐந்து வங்கிகளின் பட்டியல் இங்கே உள்ளன.

author-image
WebDesk
New Update
Unity Small Finance Bank latest FD interest rates

வரி-சேமிப்பு FDக்கு, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் விலக்கு கோரலாம்.

Tax-saving fixed deposits: டெபாசிட் முதலீட்டுக்கு அதிக வரிச்சலுகையைப் பெற்று அனுபவிக்க விரும்பும் எந்தவொரு தனிநபரும், வரி சேமிப்பு நிலையான வைப்புத்தொகையில் (FD) முதலீடு செய்யலாம்.

Advertisment

இந்த வரி சேமிப்பு FD இல் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகை ரூ. 1.5 லட்சம் ஆகும். வரி-சேமிப்பு FD களுக்கு ஐந்து வருட லாக்-இன் காலம் உள்ளது.

அத்தகைய வரி-சேமிப்பு FDக்கு, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் விலக்கு கோரலாம்.

பழைய வரியைத் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மட்டுமே பிரிவு 80C இன் கீழ் விலக்கு அளிக்கப்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அந்த வகையில், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு விகிதம் உள்பட, வரி சேமிப்பு FDகளுக்கு அதிக வட்டி விகிதத்தை வழங்கும் ஐந்து வங்கிகளின் பட்டியல் இங்கே உள்ளன.

இந்த விகிதங்கள் அக்டோபர் 7, 2023 முதல் ரூ.2 கோடிக்குக் குறைவான டெபாசிட்களுக்கு மட்டும் பொருந்தும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

1) டிசிபி வங்கி

டிசிபி (DCB) வங்கி 60 வயதுக்குள்பட்ட தனிநபர்களுக்கு வரி சேமிப்பு FDகளுக்கு 7.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

2) இண்டஸ்இந்த் வங்கி

இண்டஸ்இந்த் (IndusInd) வங்கி 5 ஆண்டுகள் (60 மாதங்கள்) வரி சேமிப்பு FDகளுக்கு 7.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

3) யெஸ் வங்கி

யெஸ் (YES) வங்கி வரி சேமிப்பு FDகளுக்கு 7.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

4) ஆக்ஸிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி வரி சேமிப்பு FDகளுக்கு 7% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

5) ஹெச்டிஎஃப்சி வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கி வரி சேமிப்பு FDகளுக்கு 7% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

வரி சேமிப்பு FD இன் வட்டி வருமானம் வருமானத்தின் கீழ் வரிக்கு உட்பட்டது ஆகும். இருப்பினும், வட்டி வருமானத்தின் மீதான டிடிஎஸ், அத்தகைய வட்டி வருமானத்தின் கிரெடிட் நேரத்திலோ அல்லது பணம் செலுத்தும் நேரத்திலோ (எது முந்தையது) கழிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இதனை சம்பந்தப்பட்ட வங்கியில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், ஸ்மால் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையிலான எஃப்.டி.களுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment