உங்கள் வரிப் பணத்தை மிச்சப்படுத்தும் 5 சிறப்பு திட்டங்கள் இதோ!
Tax Saving Other Than PPF, ELSS 2019: ஆனால் வரிப் பணத்தை மிச்சம் செய்ய நாம் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட அளவு பணத்தை ஒரு சில திட்டங்களில் முதலீடாக செய்ய வேண்டிய நிலை ஏற்படும்
Tax Saving Other Than PPF, ELSS 2019: ஆனால் வரிப் பணத்தை மிச்சம் செய்ய நாம் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட அளவு பணத்தை ஒரு சில திட்டங்களில் முதலீடாக செய்ய வேண்டிய நிலை ஏற்படும்
Top Tax Saving Investments Other than PPF ELSS : வருமான வரி செலுத்துவது ஒவ்வொரு இந்திய குடிமகனின் முக்கிய கடமையாகும். நமக்கு கிடைக்கும் மேம்பாடுகள் முதற்கொண்டு அனைத்து சிறப்பு சலுகைகளையும் இந்த வருமான வரி மூலமாகவே நாம் அடைகின்றோம். ஆனாலும் சில நேரங்களில் நமக்கான சேமிப்பு மிகவும் அவசியமாகிறது. அதனால் நாம் எதில் நாம் வருமானத்தை மிச்சம் செய்ய வேண்டும் என்று யோசனை செய்ய துவங்குவோம். ஆனால் வரிப் பணத்தை மிச்சம் செய்ய நாம் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட அளவு பணத்தை ஒரு சில திட்டங்களில் முதலீடாக செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஐந்து திட்டங்களும் முதலீடுகள் ஏதும் இல்லாமல் வரிப்பணத்தை மிச்சம் செய்ய பெரிதும் உதவுகிறது.
Advertisment
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
Tuition fees
Advertisment
Advertisements
குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கட்டும் கல்விக்கட்டணத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. ஐ.டி. சட்டம் 80சி பிரிவின் படி குழந்தைகளுக்கு கட்டப்படும் கல்விக்கட்டணத்திற்க்கு வருமான வரித்தளர்வு அளிக்கப்படுகிறது. ப்ளே ஸ்கூல் துவங்கி, ப்ரீ நர்சரி, நர்சரி, அரசு அல்லது தனியார் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்களில் படிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு வருடத்திற்கு ரூ. 1.5 லட்சம் வரை கட்டணம் செலுத்தும் பெற்றோர்களுக்கு வருமான வரி தளர்வு அளிக்கப்படுகிறது.
வீட்டுக்கடன் மாதாந்திர தவணை செலுத்தும் போது, இந்த வருடத்தில் நீங்கள் செலுத்திய ப்ரின்சிபல் போர்சனுக்கு வருமான வரித்தளர்வு அளிக்கப்படுகிறது. இது ஐ.டி. சட்டம் பிரிவு 24ன் கீழ் செல்லுபடியாகும். வீட்டுக்கடன் மூலம் ஒருவர் வீடு வாங்கும் போது வருமான வரித் தளர்வு அளிக்கப்படுகிறது.
ஹெல்த் ப்ரீமியம்
ஒரு வீட்டில் ஒருவர் எதிர்கால தேவைகளுக்காக பணம் சேர்த்தால் மற்றொருவர் மருத்துவ காப்பீட்டினை தேர்வு செய்து அதில் பணம் செலுத்தலாம். ஒரு அவசர தேவை என்று வரும் போது சேமிப்பை கரைக்காமல் இருக்க அது நிச்சயம் உதவும். வரிமானவரி சட்டம் பிரிவு 80டியின் படி மூத்த குடிமக்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 50,000 வரை டிடெக்ட் செய்து கொள்ள வழி வகை செய்கிறது.
Term insurance premium
மருத்துவ காப்பீடும் ஆயுள் காப்பிட்டினை போன்று பல்வேறு நேரங்களில் நம்மை காக்கிறது. ஏதார்த்தமான தேவைகளுக்கு மட்டுமின்றி வருமான வரியில் இருந்தும் தளர்வினை பெற்றுத் தருகிறது இந்த வகை சேமிப்பு.
Education Loan
உங்கள் குழந்தைகள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் கல்விக்கடன் பெற்றிருக்கிறார்கள் என்றால், அந்த கடனை திருப்பி செலுத்த நீங்கள் உதவுகிறீர்கள் என்றாலும் உங்களுக்கு வருமான வரி தளர்வை 80சி உறுதி செய்கிறது.