Advertisment

3 ஆண்டுகள் வைப்பு நிதிக்கு 9.5 சதவீதத்திற்கு மேல் வட்டி; வாடிக்கையாளர்களுக்கு லாபம் தரும் டாப் 10 வங்கிகள்

பெரிய வங்கிகளை ஒப்பிடுகையில் சிறிய நிதி நிறுவன வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான வட்டி விகிதத்தை வைப்பு நிதிகளுக்கு வழங்குகின்றன. அந்த வகையில் அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து இதில் காணலாம்.

author-image
WebDesk
New Update
FD

கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிய நிதி நிறுவன வங்கிகள் உள்ளிட்ட பல வங்கிகள், வைப்பு நிதிகளுக்கான தங்கள் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. வாடிக்கையாளர்களை ஈர்ப்பது பெரிய வங்கிகளை விட, சிறிய வங்கிகளுக்கு சவாலாக இருந்து வருகிறது.

Advertisment

இதனை ஈடு செய்யும் விதமாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தை சிறிய நிதி வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. அதனடிப்படையில், அதிக வட்டி வழங்கும் டாப் 10 வங்கிகள் குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.

1. யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Unity Small Finance Bank)

இந்த வங்கியில் 1001 நாட்கள் டெபாசிட் காலத்திற்கு 9.5% வரை வட்டி வழங்கப்படுகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு 9 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 9.5 சதவீதமும் வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Advertisment
Advertisement

2. North-East Small Finance Bank

இந்த வங்கியில் 1.5 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு, 9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இது பொது வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஒரே வட்டி விகிதத்தை வழங்குகிறது.

3. சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance Bank)

மூத்த குடிமக்களால் 3 ஆண்டுகள் டெபாசிட் செய்யப்படும் வைப்பு நிதிக்கு 9.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மற்ற வாடிக்கையாளர்களுக்கு 8.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

4. உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank)

இந்த வங்கியில் மூன்று ஆண்டுகள் வைப்பு நிதிக்கு மூத்த குடிமக்களுக்கு 9.10 சதவீதமும், பொது வாடிக்கையாளர்களுக்கு 8.5 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

5. ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank)

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் மூத்த முடிமக்களின் மூன்று ஆண்டுகள் வைப்பு நிதி திட்டத்திற்கு 8.75 சதவீத வட்டியும், மற்ற பயனாளிகளுக்கு 8.25 சதவீத வட்டியும் கொடுக்கப்படுகிறது.

6. உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Ujjivan Small Finance Bank)

இந்த வங்கியிலும் மூத்த குடிமக்களின் 3 ஆண்டுகள் வைப்பு நிதிக்கு 8.75 சதவீத வட்டியும், மற்ற பயனாளிகளுக்கு 8.25 சதவீத வட்டியும் கொடுக்கப்படுகிறது.

7. ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Equitas Small Finance Bank)

இதேபோல், ஈக்விடாஸ் வங்கியிலும் மூத்த குடிமக்களின் 3 ஆண்டுகள் வைப்பு நிதிக்கு 8.75 சதவீத வட்டியும், மற்ற பயனாளிகளுக்கு 8.25 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.

8. ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ESAF வங்கியிலும் மூத்த குடிமக்களின் 3 ஆண்டுகள் வைப்பு நிதிக்கு 8.75 சதவீத வட்டியும், மற்ற பயனாளிகளுக்கு 8.25 சதவீத வட்டியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

9. ஷிவாலிக் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Shivalik Small Finance Bank)

இந்த வங்கியில் மூத்த குடிமக்களின் 3 ஆண்டுகள் வைப்பு நிதிக்கு 8.8 சதவீதம் வட்டியும், பொது வாடிக்கையாளர்களுக்கு 8.3 வட்டியும் வழங்கப்படுகிறது.

10. AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

AU வங்கியில் மூத்த குடிமக்களின் வைப்பு நிதிக்கு 8.6 சதவீதமும், பொது வாடிக்கையாளர்களுக்கு 8 சதவீதமும் வட்டி விகிதம் உள்ளது.

சிறு நிதி வங்கி வைப்பு நிதிகள் பாதுகாப்பானதா?

பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து சிறு நிதி வங்கிகளும், ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சிறு நிதி வங்கிகளில் தங்கள் பணத்தை முதலீடு செய்யும் பயனாளிகள், வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கார்ப்பரேஷன் வழங்கும் வைப்புத்தொகை காப்பீட்டிற்கு தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Fixed Deposits Loan Against Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment