வட்டி அதிகம்; ரிஸ்க்கே கிடையாது... டாப் 3 போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம் இதுதான்!

நம் பணத்தை தபால் நிலையத்தில் இருக்கும் சேமிப்பு திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். இந்த மூன்று திட்டங்களில் அதிகப்படியான வட்டி வழங்கப்படுகிறது.

நம் பணத்தை தபால் நிலையத்தில் இருக்கும் சேமிப்பு திட்டங்களில் எப்படி முதலீடு செய்வது என்பது குறித்து இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். இந்த மூன்று திட்டங்களில் அதிகப்படியான வட்டி வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
P O Schemes

கடினமாக வேலை பார்த்து ஈட்டிய பணத்தை எந்த விதமான ஆபத்தும் இன்றி அதிகமான வட்டி அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். அப்படிப்பட்டவர்களின் விருப்ப தேர்வாக தபால் நிலையத்தில் இருந்து வழங்கப்படும் சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. அந்த வகையில் அதிக வட்டி அளிக்கும் மூன்று திட்டங்கள் குறித்து காணலாம்.

Advertisment

1. Public Provident Fund (பி.பி.எஃப்)

அந்த வரிசையில் முதலாவது இடத்தை பி.பி.எஃப் திட்டம் பெறுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு வயது வரம்பு கிடையாது. இதன் வட்டி விகிதம் 7.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த வட்டி விகிதம் வழங்கப்படும். ரூ. 1.5 லட்சம் வரை இதற்கு வருமான வரி விலக்கு இருக்கிறது. இந்த திட்டத்தை பயன்படுத்தி வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனுக்கு 8.1 சதவீத வட்டி வசூலிக்கப்படும். இந்தக் கடனை 36 மாதங்களுக்குள் திருப்பி செலுத்தி இருக்க வேண்டும். மேலும், இந்த திட்டம் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவு பெற்றால் அதில் இருந்து 50 சதவீத பணத்தை அவசர தேவைகளுக்காக பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டத்தின் மொத்த முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை இதில் முதலீடு செய்ய முடியும். இப்படி செய்தால் 15 ஆண்டுகளுக்கு பின்னர் நமக்கு சுமார் ரூ. 40 லட்சத்திற்கும் அதிகமாக கிடைக்கும். 

2. National Savings Certificate (என்.எஸ்.சி)

Advertisment
Advertisements

இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க 18 வயது பூர்த்தி அடைந்த நபராக இருத்தல் அவசியம். இதன் மொத்த முதிர்வு காலம். 5 ஆண்டுகள். இதில் ரூ. 1000-ல் இருந்து முதலீடு செய்ய முடியும். குறிப்பாக, உச்சபட்ச முதலீடு வரம்பு கிடையாது. இதற்கும், ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு கிடைக்கிறது. மேலும், இந்த திட்டத்தில் 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்தப் பத்திரத்தை வங்கியில் சமர்ப்பித்து கடன் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணமாக இந்த திட்டத்தில் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்கு பிறகு நமக்கு ரூ. 7 லட்சத்து 24 ஆயிரத்து 517 மொத்தமாக கிடைக்கும்.

3. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (Senior Citizen Savings Scheme)

மூத்த குடிமக்களுக்காக பிரத்தியேகமாக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலீடு செய்யலாம். எனினும், 55 வயது பூர்த்தியான அரசு ஊழியர்களும் இதில் முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் 8.2 சதவீதம் வட்டியாக வழங்கப்படுகிறது. இதன் மொத்த முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ஆனால், மூன்று ஆண்டுகள் வரை இதனை நீட்டித்துக் கொள்ள முடியும். இதில் குறைந்தபட்சம் ரூ. 1000-ல் இருந்து அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்து கொள்ளலாம். இதன்கீழ், ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு கிடைக்கிறது. எனவே, ஓய்வுக்கு பின்னர் நமக்கு கிடைக்கும் பணத்தை இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ள முடியும்.

நன்றி - Boss Wallah (Tamil) Youtube Channel

Investment Scheme Post Office Savings Scheme

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: