Top up education loans : உயர்கல்விக்காக இன்னும் அதிக எண்ணிகையிலான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் சூழலில் அந்த கல்விக்கான கட்டணம் விண்ணை முட்டி நிற்கிறது. ஆதோடு மட்டுமல்லாமல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதும் பெருவாரியான மக்களை அதுவும் குறிப்பாக வெளிநாட்டு கரன்சியில் செலவு உள்ளவர்களை மிகவும் பாதிக்கிறது. வெளிநாட்டில் படிக்கின்ற பிள்ளைகளை உடைய பெற்றோர் மற்றும் தங்கள் குழந்தைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்க நினைக்கும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வெளிநாட்டு கல்வி செலவுக்கு நிதியளிக்க பொதுவாக கல்வி கடன் வாங்குகிறார்கள்.
ஆனாலும் இந்த செலவு அதிகரித்துக் கொண்டே இருக்கும், பெரும்பாலான நேரங்களில் இந்த பிள்ளைகள் மற்றும் அவரது பெற்றோர் பணப் பற்றாக்குறை காரணமாக செலவினங்களுக்கு நிதியளிக்க கூடுதலான கடன் வாங்குகிறார்கள். அதுமாதிரியான நேரங்களில் ஒருவருக்கு கூடுதலான பணம் தேவைப்படும் போது ஒருவர் டாப்-அப் (top up) கல்வி கடனை, வெளிநாட்டு கல்விக்கு நிதியளிக்க தேர்ந்தெடுக்கலாம். ஏற்கனவே நீங்கள் கல்விக் கடன் வாங்கியுள்ள அதே வங்கியில் இருந்து இந்த கடனை நீங்கள் வாங்கலாம்.
Advertisment
Advertisements
ஏற்கனவே அந்த வங்கியிடம் உங்கள் தகவல்கள் அனைத்தும் இருப்பதால் எந்தவித சிக்கலும் இல்லாமல் எளிதில் கடன் ஒப்புதலை பெற்றுக் கொள்ளலாம். கூடுதலான டாப்-அப் கடனை அனுமதிப்பது என்பது அதிகபட்ச கடன் தகுதி மற்றும் கடன் வாங்கியவரின் தற்போதைய நிலுவைத் தொகையை பொருத்தது. எடுத்துக்காட்டாக நீங்கள் ரூபாய் 30 லட்சம் கடன் பெற தகுதியானவர் என்று வைத்துக் கொள்வோம், ஆனால் நீங்கள் ரூபாய் 20 லட்சம் மட்டும்தான் கடன் வாங்கியுள்ளீர்கள் என்றால் இன்னும் 10 லட்சம் கூடுதலாக கடன் பெற உங்களுக்கு தகுதியுள்ளது. மேலும் அந்த 20 லட்சம் கடனில் நீங்கள் ரூபாய் 8 லட்சத்தை திருப்பி செலுத்திவிட்டீர்கள் என்றால் உங்கள் மொத்த தகுதியும் அதிகரிக்கும் அதாவது நீங்கள் ரூபாய் 18 லட்சம் வரை கடன் வாங்கிக்கொள்ளலாம்.
சில சமயம் உங்கள் தற்போதைய வங்கியை விட மற்ற வங்கிகள் கூட குறைந்த வட்டியில் கடன் தரலாம். ஒருவேளை உங்கள் தற்போதைய வங்கி கூடுதல் கடன் தேவைக்கு மறுப்பு தெரிவித்தால் இது கூட உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். அனைத்து வங்கிகளும் டாப்-அப் கடன் தருவதில்லை. கூடுதல் கடன் தருவது தொடர்பான ஒப்புதல் அளிப்பது அந்தந்த வங்கிகளின் கொள்கையை பொருத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news