scorecardresearch

லிட்டருக்கு 21 கி.மீ மைலேஜ்.. இன்னோவா ஹைக்ராஸ் கார் அறிமுகம்

புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைக்ராஸ் என்ற காரை அறிமுகம் செய்தது.

Toyota Innova Hycross Price in Coimbatore
கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னோவா ஹைக்ராஸ் கார்.

டோயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் எனும் புதிய கார் அறிமுக விழா கோவை ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் நடைபெற்றது.
கார் தயாரிப்பில் முன்னனி நிறுவனமாக டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா மாடல் வகை கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற மாடலாக இன்று வரை உள்ளது.

இந்நிலையில் இன்னோவா மாடலில் புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் இன்னோவா ஹைக்ராஸ் எனும் புதிய மாடல் கார்களை டொயோட்டா அறிமுகபடுத்தி உள்ளது.

இதற்கான அறிமுக விழா கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா ஷோரூமில் நடைபெற்றது. இதில் ஷோரூமின் நிர்வாக இயக்குனர் விக்னேஸ்வர் புதிய இன்னோவா ஹைக்ராஸ் மாடல் காரை அறிமுகப்படுத்தினார்.

கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னோவா ஹைக்ராஸ் கார்.
கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னோவா ஹைக்ராஸ் கார்.

இந்நிகழ்ச்சியில் ஷோரூமின் தலைமை மேலாளர்கள் மற்றும் ஏ.ஆர்.சி.குழும நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய இன்னோவா ஹைக்ராஸ் மாடல் வகை கார்கள் குறித்து நிர்வாக இயக்குனர் விக்னேஸ்வர் கூறுகையில், “டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் லிட்டருக்கு 21.2 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலும் ஹைப்ரிட் வகையில் ஆட்டோமெட்டிக் எலக்ட்ரிக் இன்ஜின் ஆப்சனும் இருக்கிறது.

மேலும், ஹைக்ராஸ் காரின் உள்ளே இடவசதி மிகவும் தாராளமாக உள்ளது. இதில் அதிநவீன வகை பாதுகாப்பு அம்சங்களுடன் டைனமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஹை பீம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன” என்றார்.

செய்தியாள் பி ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Toyota innova hycross price in coimbatore