/tamil-ie/media/media_files/uploads/2021/12/train.jpg)
ரயிலில் டிக்கெட் புக் செய்த பயணிகள், ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு போர்டிங் ஸ்டேஷனை மாற்றி கொள்வதற்கான வாய்ப்பை ஐஆர்சிடிசி வழங்கியுள்ளது. ஐஆர்சிடிசி விதிமுறைப்படி, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்த பயணிகள் அனைவருக்கும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. மாறாக, ஏஜென்ட் வழியாக புக் செய்தவர்களுக்கு இந்த வசதி கொடுக்கப்படவில்லை.
போர்டிங் ஸ்டேஷனை மாற்றிவிட்டால், சம்பந்தப்பட்ட நபரால் மீண்டும் ஒரிஜினல் போர்டிங் ஸ்டேஷனில் ரயில் ஏற முடியாது. அதே போல், ஒருவரால் ஒருமுறை மட்டுமே போர்டிங் ஸ்டேஷனை மாற்றிக்கொள்ள முடியும்.
டிக்கெட்டில் உள்ள போர்டிங் ஸ்டேஷனை மாற்றாமல், வேறு ஸ்டேஷனில் ஏறும் பட்சத்தில், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியதாக இருக்கும். ஒரிஜினல் போர்டிங் பாயிண்ட் மற்றும் மாறி ஏறிய போர்டிங் பாயிண்ட் இடையே உள்ள கட்டண வித்தியாசத்தை அபராதமாக செலுத்த வேண்டும்.
போர்டிங் ஸ்டேஷனை மாற்றும் எளிய வழிமுறை
- ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தோர், முதலில் ஐஆர்சிடிசியின் irctc.co.in/nget/train-search. இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.
- அதில், லாகினுக்கு தேவையான தகவல்களை பதிவிட வேண்டும்.
- அடுத்து, Booking Ticket History ஆப்ஷனை கிளிக் செய்து, போர்டிங் மாற்ற விரும்பும் ரயிலை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அடுத்து, Change Boarding Station ஆப்ஷனை கொடுக்க வேண்டும். பின்னர், நீங்கள் ஏற விரும்பும் போர்டிங் ஸ்டேஷனை கிளிக் செய்து, கன்பார்ம் கொடுக்க வேண்டும்.
- அடுத்த திரையில் OK கொடுத்ததும், போர்டிங் மாற்றப்பட்டதற்கான மெசேஜ் உங்கள் செல்போனுக்கு வந்துவிடும்.
குறிப்பு: ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, போர்டிங் ஸ்டேஷனை மாற்றியாக வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.