அதிக டிக்கெட்டுகளை புக் பண்ணனுமா? ஐஆர்சிடிசி கணக்கை ஆதாருடன் இணையுங்கள்

Link IRCTC account with Aadhaar : காலை 8 மணி முதல் 12 மணிக்குள் பயனர் தனது பயனர் ID மூலம் ஐஆர்சிடிசி தளத்தில்...

IRCTC Advance Ticket Booking: ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்வது மிகவும் சவாலான விஷயம். அதிலும் குறிப்பாக தட்கல் முறையில் முன்பதிவு செய்வது! ஏனேன்றால் அது மிகவும் வேகமாக முன்பதிவாகிவிடும். குளிரூட்டப்பட்ட முதல் வகுப்பு மற்றும் Executive Class அகிய இரண்டையும் தவிர அனைத்து வகையான ரயில் வகுப்புகளிலும் தட்கல் முறையில் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. மின்னணு ரயில் பயணச்சீட்டு (e-tickets) முன்பதிவு அதோடு மட்டுமல்லாமல் தட்கல் முறை முன்பதிவு முறையிலும் தரகர்களின் நடவடிக்கைகளை தடுப்பதற்காக இந்திய ரயில்வேயின் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (Indian Railway Catering and Tourism Corporation IRCTC) பல சோதனைகளை பயன்படுத்தியுள்ளது, என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் லோக் சபாவில் எழுத்துபூர்வமாக ஒரு கேள்விக்கு அளித்த பதிலில் கூறியுள்ளார்.

வாகன காப்பீடு: காருக்கான காப்பீட்டு தவணையை குறைக்க சில குறிப்புகள்

நேர்மையற்ற முறையில் தரகர்களால் முன்பதிவு செய்யப்படும் ரயில் பயணச்சீட்டுகளை தடுப்பதற்காக இந்திய ரயில்வே எடுத்துள்ள நடவடிக்கைகள்

1. ஒரு பயனர் 2 தட்கல் முறை முன்பதிவு பயணச்சீட்டுகளை மட்டும் தான் காலை 10 முதல் 12 மணி வரை எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு.

2. தட்கல் பயணச்சீட்டு முன்பதிவுக்கு random security question கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

3. ஒரு நாளுக்கு ஒரு ரயிலில் ஒரே ஒரு தட்கல் முன்பதிவு பயணச்சீட்டு என்ற கட்டுப்பாடு தரகர்களுக்கு (retail service providers- agents) விதிக்கப்பட்டுள்ளது.

4. கொடுக்கப்பட்டுள்ள கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஒரே ஒரு ஐஆர்சிடிசி User ID உருவாக்க முடியும் என்ற கட்டுப்பாடு.

5. ஒரு தனி பயனர் ஒரு மாதத்துக்கு 6 ரயில் முன்பதிவு பயணச்சீட்டுகளை மட்டும் தான் முன்பதிவு செய்யமுடியும் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பயனர் தனது ஐஆர்சிடிசி பயனர் ID ஐ ஆதார் எண்ணுடன் இணைத்திருந்தால் அந்த எண்ணிக்கை 6 லிருந்து 12 ஆக உயர்த்தப்படும்.

6. காலை 8 மணி முதல் 12 மணிக்குள் பயனர் தனது பயனர் ID மூலம் ஐஆர்சிடிசி தளத்தில் ஒரு முறை நுழைந்தால் ஒரு பயணச்சீட்டு மட்டும்தான் முன்பதிவு செய்யமுடியும்.

வீடு வாங்கும் ஐடியாவில் இருக்கீங்களா? அப்படியே எல்ஐசி பக்கம் கொஞ்சம் வாங்க

7. பதிவு செய்யும் போது, உள்நுழையும் போது மற்றும் முன்பதிவு பக்கம் மோசடியான முன்பதிவா என்பதை automation மென்பொருள் மூலம் சரிபார்க்கும் போது என மூன்று இடங்களில் Dynamic captcha அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

8. பயனர்களால் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்படும் போது பயணிகள் விவரங்களை உள்ளீடு செய்வதற்கும் captcha வை காட்சிப்படுத்துவதற்கும் தேவைப்படும் குறைந்தபட்ச நேரத்தை சரிப்பார்க்கும்.

9. Advance Reservation Period (ARP) முன்பதிவு திறந்த முதல் 15 நிமிடங்களில் ஐஆர்சிடிசி யின் அங்கீகரிக்கப்பட்ட தரகர்கள், ரயில் பயணச்சீட்டு மற்றும் தட்கல் முறை பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Business News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close