Advertisment

கிரெடிட் கார்ட் மேல எப்பவும் ஒரு கண்ணு இருக்கட்டும்... செலவுகளை கவனத்தில் கொள்ளுங்கள்!

Diners Club Premium Credit Card அட்டையின் மூலம் ஒவ்வொரு முறை ரூபாய் 150 செலவு செய்யும் போதும், இந்த அட்டைதாரர்கள் 4 வெகுமதி புள்ளிகளை பெறலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கிரெடிட் கார்ட் : ட்யூ பணத்தை குறைவாக கட்டினால் என்ன நடக்கும்?

எஸ்பிஐ, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி பயண கடன் அட்டைகளின் நன்மைகள், கட்டணம் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது.  கடன் அட்டைகளை (Credit card) அஜாக்கிரதையாக அதிகமாக உபயோகித்தால் அது நம்மை கடனில் தள்ளிவிடும். ஆனால் கடன் அட்டைகளை ஜாக்கிரதையாக உபயோகித்தால் அது நமக்கு பல நன்மைகளைத் தரும். கடன் அட்டைகள் பொதுவாக பல நன்மைகளுடன் வருகிறது. உடனடி கடனை வட்டி இல்லா காலத்தில் வழங்குவது மட்டுமல்ல, மேலும் பல தேவைகளையும் நிறைவேற்றுகின்றன.

Advertisment

உங்களுக்கு இந்த கடன் அட்டையை எவ்வாறு சரியாக பயன்படுத்த வேண்டும் என்று தெரியாவிட்டால் எளிதில் அதிகம் செலவு செய்து கடனாளியாகிவிடுவீர்கள். பயணம் செய்யும் போது அல்லது கடையில் பொருட்கள் வாங்கச் செல்லும் பொது என எப்போதும் கையில் பணம் எடுத்துச் செல்லும் சுமையை குறைப்பதில் கடன் அட்டைகளின் பங்கு முக்கியமானது. அத்தகைய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பல்வேறு வகையான கடன் அட்டைகள் வெவ்வேறு தேவைகளுக்காக கிடைக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கி SBI

SBI Platinum Air India card என்பது ஏர் இந்தியாவேடு இணைந்து வழங்கப்படும் ஒரு கடன் அட்டை. இது 5000 வெகுமதி புள்ளிகளை அறிமுக சலுகையாக கடன் அட்டைதாரர்களுக்கு வழங்குகிறது. மாதாந்திர வட்டி 3.35 சதவிகிதம் என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது. எஸ்பிஐ யால் வழங்கப்படும் மற்றோரு பயண கடன் அட்டை Signature Air India card.

ஐசிஐசிஐ வங்கி ICICI Bank

MakeMyTrip ICICI Bank Platinum Credit Card என்பது MakeMyTrip உடன் இணைந்து வழங்கப்படும் ஒரு அட்டை. இந்த அட்டையில் ரூபாய் 20,000 மதிப்பிலான சலுகைகளை வழங்குகிறது. மேலும் ரூபாய் 500 MakeMyTrip money ஐ Lemon Tree Hotels இன் சலுகை கூப்பன்களுடன் அறிமுக சலுகையாக வழங்குகிறது. இந்த கடன் அட்டையில் ரூபாய் 2,500 சேர்க்கை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஸ்டாண்டர்ட் சார்டட் வங்கி (Standard Chartered)

Standard Chartered Yatra Platinum credit card என்பது Yatra.com உடன் இணைந்து வழங்கப்படும் ஒரு கடன் அட்டை. பயணிகளை இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அட்டையில் 4X வெகுமதிகள் மற்றும் Yatra.com வழியாக நடைபெறும் அனைத்து பயண முன்பதிவுகளுக்கும் 10 சதவிகித கேஷ் பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த கடன் அட்டைதாரர்கள் விமான பயண சீட்டு முன்பதிவு செய்துவிட்டு அதை ரத்து செய்தால் ரத்து செய்வதற்கான கட்டணமும் தளளுபடி செய்யப்படுகிறது. மாதாந்திர வட்டி விகிதமாக 3.49 சதவிகிதம் விதிக்கப்படுகிறது.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (American Express)

American Express Platinum Travel credit card ல் அறிமுக சலுகையாக ரூபாய் 4000 அளவிலான பயண கூப்பன்கள் கடன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அட்டைதார்களுக்கு 20 சதவிகித கட்டண சலுகை குறிப்பிட்ட உணவகங்களில் வழங்கப்படுகிறது. மாதாந்திர வட்டி விகிதம் 3.35 சதவிகிதம் என்ற அளவில் வசூலிக்கப்படுகிறது.

ஹெச்எப்டிசி HDFC Bank

Diners Club Premium Credit Card அட்டையின் மூலம் ஒவ்வொரு முறை ரூபாய் 150 செலவு செய்யும் போதும், இந்த அட்டைதாரர்கள் 4 வெகுமதி புள்ளிகளை பெறலாம். இந்த அட்டை 2500 வெகுமதி புள்ளிகளை அறிமுக சலுகையாக வழங்குகிறது. மாதாந்திர வட்டிவிகிதமாக 3.49 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது. மேலும் இந்த அட்டையில் ரூபாய் 2,500 சேர்க்கை கட்டணமாகவும் புதுப்பித்தல் கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Sbi Hdfc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment