tvs apache rr 310 price : இளைஞர்களின் கனவு நாயகன். முதல் டீசரிலே தெறிக்கவிட்ட டிவிஎஸ் மோட்டர் நிறுவனத்தின் அபாச்சி ஆர் ஆர் 310என்னும் சொகுசு ரேஸ் ரக பைக் இந்தியாவில் அறிமுகம் ஆகியது. தற்போது ஷோரூமில் விற்பனைக்கும் வந்துவிட்டது.
இந்த அதிநவீனர் அபாச்சி ஆர் ஆர் 310 பைக் ‘ரேஸ் ட்யூண்ட் ஸ்லிப்பர் கிளட்ச்’ என்னும் அதிநவீன, புதிய தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தி இருக்கிறது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர் ஆர் 310 ஓட்டும்போது கைக்கு அதிக சிரமம் இல்லாமல், வெகு சுலபமாக கியரை மாற்ற உதவுவதோடு, வெகு வேகமாக பயணிக்கும் போது, சாலை திருப்பங்கள் மற்றும் ஓரங்களில் திடீரென வேகத்தைக் குறைக்கவேண்டிய சூழலிலும் வாகனத்தை கட்டுப்பாட்டுடன் ஓட்ட உதவும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த புதிய தொழில்நுட்ப மேம்படுத்துதலுடன் கூடுதலாக தோற்றத்திலும் புதுமை சேர்க்கும் வகையில் ‘ஃபேண்டம் ப்ளாக்’ எனும் புதிய வண்ணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.முழுவதும் அழகாக உருவாக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளை கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த பைக்கில் முதல் அப்டேட்டாக சில ஸ்டைல் மாற்றங்கள் மற்றும் மெக்கனிக்கல் மாற்றங்களுடன் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான டீசரிலும் இதுக் குறித்த முழு விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 பைக்கள் “Crafted to be invisible” என்ற டெக்-லைன் உடன் வெளியாகியுள்ளது. டிவிஎஸ் மோட்டர் நிறுவனம், உலகளவில் ஸ்கூட்டர் மற்றும் ஆட்டோ உற்பத்தியாளர்களில் முன்னணியில் உள்ளது. இப்போது வெளிவந்திருக்கும் அப்பாச்சி ஆர்ஆர் 310 இந்திய சந்தையில் ஒரு மிகப் பெரிய புரட்சியை செய்ய இருப்பது பைக் ஆர்வலகர்கள் மத்தியில் உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே டிவிஎஸ் அப்பாச்சி ஆர் ஆர் 310 வாகனத்தைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தை தங்களது இருச்சக்கர வாகனத்தில் பொருத்தி கொள்ளமுடியும். இந்த வசதியை இந்தியா முழுவதிலும் செயல்பட்டு வரும் தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்களிடம் மிகவும் குறைவான கட்டணத்தில் பெறமுடியும் என்பது சந்தோஷமளிக்கும் செய்தியாகும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/05/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-25-300x200.jpg)
313cc சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்களில் கூடுதலாக பிஎம்டபிள்யூ G 310 ஆர் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் மற்றும் DOHC இன்ஜின்கல்லுடன் 34 bhp ஆற்றலில் 9,700rpm மற்றும் 27.3Nm பீக் டார்க்கில் 7,700rpm-லும் இயக்கும். 2019 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 சில மாற்றங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இவை வரும் 28ம் தேதி மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கில் வெளியாக உள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த மாற்றங்களை காணலாம் என்று டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்பெஷல் எடிசன் மோட்டார்சைக்கிளுக்கு மிகவும் ஸ்போர்ட்டியான லுக்கை வழங்கும் வகையில், யூனிக் பெயிண்டிங் ஸ்கீம் மற்றும் கிராஃபிக்ஸுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம், இந்த சிறப்பான நடவடிக்கை, மோட்டார்சைக்கிளுக்கு ஸ்போர்ட்டியான லுக் மட்டுமின்றி மிகவும் கவர்ச்சியான லுக்கையும் வழங்குகின்றது.
புதிய வகைகளில் சில மேம்பாடுகளை டிவிஎஸ் நிறுவனம் செய்துள்ளது. இந்த வசதிகள் அதிக திறனை அளிக்கும் வகையில் இருக்கும். ஆகையால், புதிய ECU அல்லது ஆற்றலுக்காக டியூன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் சில டுவிக்களுடன் சேஸ் மற்றும் சஸ்பென்சன் செட்டப்களுடன், ஸ்போர்ட்ஸ் பைக்கள் போன்ற தோற்றத்தில் இருக்கும்.
தற்போது டெல்லியில் உள்ள ஷோரூம்களில் இதன் விற்பனை தொடங்கியுள்ளது. இதன் விலை 2.24 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.