நாட்டில் உள்ள iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தன்னார்வமாக திரும்பப் பெறுவதாக டி.வி.எஸ் அறிவித்துள்ளது. ஜூலை 10, 2023 மற்றும் செப்டம்பர் 09, 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட iQube ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட தேதிகளில் தயாரிக்கப்பட்ட அனைத்து ஸ்கூட்டர்களின் பிரிட்ஜ் ட்யூபை ஆய்வு செய்வதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திரும்ப பெறுதல் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட யூனிட்களின் சரியான எண்ணிக்கையை நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் ஆகஸ்ட் முதல் அக்டோபர் 2023 வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் சுமார் 45,000 யூனிட்கள் விற்பனையாகியுள்ளதாக அந்த காலகட்டத்தின் விற்பனை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஓசூரைச் சேர்ந்த பைக் தயாரிப்பாளர், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுடன் நேரடியாகவோ அல்லது அதன் டீலர்கள் மூலமாகவோ தொடர்பு கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
பிராண்ட் அல்லது டீலர்கள் சோதனையை திட்டமிட வாடிக்கையாளர்களை அழைப்பதன் மூலம் திரும்பப் பெறுதல் ஒரு கட்டமாக நடைபெறும்.
TVS iQube விவரக்குறிப்புகள்
டி.வி.எஸ் ஐக்யூப் புதிய அடிப்படை மற்றும் டாப்-ஸ்பெக் ST மாறுபாட்டை அறிமுகப்படுத்தி இருந்தது. அடிப்படை iQube டிரிம் டெல்லியில் ரூ.84,999 மற்றும் மற்ற இடங்களில் ரூ.94,999 (எக்ஸ்-ஷோரூம்) என விலையும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த iQube இன் அடிப்படை மாறுபாடு இரண்டு வண்ணத் திட்டங்களில் கிடைக்கிறது. அவை, வால்நட் பிரவுன் மற்றும் பேர்ல் ஒயிட் ஆகும். மேலும், iQube இன் அடிப்படை மாறுபாடு 4.4kW ஹப்-மவுண்டட் BLDC மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது.
இது 140 Nm முறுக்குவிசையை வெளியேற்றுகிறது. 2.2 kWh பேட்டரி பேக்கிலிருந்து ஆற்றலைப் பெறுகிறது. ஒருமுறை சார்ஜ் ரேஞ்சில் 75 கிமீ தூரம் எக்கோ மோடு மற்றும் 60 கிமீ பவர் மோடில் வழங்குவதற்கு பேட்டரி போதுமானது. வேகமான சார்ஜரைப் பயன்படுத்தி, பேட்டரி 2 மணிநேரத்தில் 0 முதல் 80% வரை சார்ஜ் செய்யலாம்.
டாப்-ஸ்பெக் iQube ST இரண்டு பேட்டரி விருப்பங்களில் கிடைக்கிறது. அவை, 3.4 kWh மற்றும் 5.1 kWh ஆகும். முந்தையது ரூ. 1.55 லட்சம் மற்றும் பிந்தைய விலை ரூ. 1.85 லட்சம் (இரண்டும் எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
3.4 kWh பேட்டரி அதிகபட்சமாக 78 kmph உடன் 100 கிமீ வரம்பை வழங்குகிறது. அதேசமயம் 5.1 kWh மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ வரம்பை கொடுக்கிறது. மேலும், 82 கிமீ வேகத்தில் செல்லும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“