Coimbatore: இளம் தொழில் முனைவோர் மையம் சார்பில் YESCON 2024 தலைப்பின் கீழ் இளம் தொழில் முனைவோர் இரண்டு நாள் கருத்தரங்கம் மற்றும் மாநாடு கொடிசியா வளாகத்தில் தொடங்கியது. தொழில் முனைவோர்களுக்கு ஏற்படும் சவால்கள் மற்றும் ஆபத்துகளை எதிர்கொள்ள மற்றும் தொழில் ரீதியான பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் இந்த அமைப்பு செயல்பட்டு வருகின்றது.
கோவையில் முதன்முறையாக இந்த மாநாடு மற்றும் கருத்தரங்கம் ஆரம்பித்து நடைபெறுகிறது. இளம் தொழில் முனைவோருக்கான உற்பத்தி மற்றும் தயாரிப்புகள் பார்வையாளர்களை ஈர்த்தன. 3000-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கு பெற்றுள்ளனர். இதில், வெற்றிகரமான தொழில் வல்லுநர்கள் சிறப்புரைகளின் மூலமாக, வணிக யுத்திகள், தலைமைத்துவ திறன்கள் போன்ற பல தொழில் முன்னேற்றத்திற்கான விஷயங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
செய்தியாளர் பி.ரஹ்மான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“