Advertisment

₹.250 முதல் முதலீடு; பெண்களை லட்சாதிபதியாக்கும் இரண்டு திட்டங்கள்!

சுகன்யா சம்ரித்தி யோஜனா, 2014 ஆம் ஆண்டு பெண் குழந்தைகளின் கல்வி, நிதி பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப் பட்டது. இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Know the LIC Kanyadan Policy

போஸ்ட் ஆபீஸில் பெண்களுக்கென்று பிரத்தியேகமாக அறிவிக்கப்பட்ட இரண்டு திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 sukanya-samriddhi-yojana | post-office-savings-scheme | 2023 பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெண்களின் தேவைக்கேற்ப மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்ற திட்டத்தைத் தொடங்கினார்.

பெயருக்கு ஏற்றாற்போல், இத்திட்டம் பெண்களின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் இரண்டு வருடங்களில் நல்ல லாபத்தைப் பெற முடியும். இது தவிர, 10 வயது வரையிலான பெண் குழந்தைக்காக சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வலுவான வருமானத்தைப் பெறலாம்.

இந்த இரண்டு திட்டங்களும் பெண்களின் தேவைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் வலுவான வருமானத்தைப் பெறலாம்.

இரண்டு திட்டங்களின் விவரங்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்

பெண்கள் சேமிப்புச் சான்றிதழ் திட்டம்

இந்தத் திட்டத்தில் எந்த வயது பெண்களும் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தின் அதிகபட்ச முதலீட்டுத் தொகை ரூ 2 லட்சம் ஆகும்.

2 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் 7.50 சதவீத நிலையான வட்டி விகிதத்தின் பலனைப் பெறலாம்.

இந்தத் திட்டத்தில், வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு ரூ.1.50 லட்சம் தள்ளுபடி கிடைக்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள்  2023 டிசம்பரில் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், திட்டத்தின் முதிர்வின்போது ரூ.2,32,044 லட்சத்தைப் பெறுவீர்கள்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா

பெண்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மத்திய மோடி அரசு 2014-ம் ஆண்டு சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தை தொடங்கியது.

இத்திட்டத்தின் கீழ், 10 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி திட்டத்தில் கணக்கைத் தொடங்கி, ஆண்டுக்கு ரூ.250 முதல் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்து பெரும் வருமானத்தைப் பெறலாம்.

பெண் குழந்தைகளின் பெயரில் நடத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், பெண் 18 வயதைத் கடந்த பிறகு டெபாசிட் தொகையில் 50 சதவீதம் வரை எடுக்கலாம்.

21 வயதில் முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். இத்திட்டம் உங்கள் மகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளில் இருந்து விடுபட உதவுகிறது. 

இந்த திட்டத்தின் கீழ், டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு அரசு 8.2 சதவீத வட்டி விகிதத்தை  வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Post Office Savings Scheme Sukanya Samriddhi Yojana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment