இரு சக்கர வாகனத்தை காப்பீடு செய்வது சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்கும், தற்செயல் நிகழ்வுகளின் போது ஏற்படும் நிதி இழப்புகளிலிருந்து பாதுகாப்பதற்கும் அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால் இரு சக்கர வாகன உரிமையாளர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற காப்பீட்டுக் கொள்கையைப் பற்றி குழப்பமடையலாம்.
பொதுவாக, மூன்றாம் தரப்பு காப்பீடு, விரிவான அல்லது முழுமையான பாலிசி ஆகியவை குறித்து குழப்பம் ஏற்படலாம். மூன்றாம் தரப்பு காப்பீடு என்பது உங்கள் வாகனம் சாலையில் வருவதற்கு முன்பு பெறப்பட வேண்டிய மிக அடிப்படையான பாலிசியாகும்.
மேலும், மோட்டார் வாகனச் சட்டம் இந்தப் பாலிசியாவது எடுத்துக்கொள்ள ஒவ்வொரு உரிமையாளரையும் கட்டாயப்படுத்துகிறது.
வாகனம் தொடர்ச்சியான பயன்பாட்டின் மூலம் அதன் மதிப்பை இழக்கிறது. தேய்மானச் செலவின் சுமை இயல்பாக பாலிசிதாரரின் மீது விழுகிறது,
இருப்பினும், பூஜ்ஜிய தேய்மானத்துடன், பேட்டரிகள், ட்யூப்கள் மற்றும் டயர்களை மட்டும் தவிர்த்து வாகனத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் 100% தேய்மானத்தை காப்பீட்டு நிறுவனம் ஈடு செய்யும்.
மேலும் வாகனத்திற்கு முழு காப்பீடு மற்றும் பின்னால் அமர்ந்திருக்கும் பயணிக்கும் காப்பீடு செய்யப்படும்போது அது கூடுதல் கவரேஜ் வழங்குகிறது.
ஆகவே கூடுமானவரை வாகனத்திற்கு முழு காப்பீட்டுடன், குறைந்தப்பட்சம் மூன்றாம் நபர் காப்பீடாவது எடுத்துக்கொள்வது நல்லது. இதில் உங்களது காப்பீடு முதிர்வு தேதியை அறிந்துவைத்துக் கொள்வது கூடுதல் சிறப்பாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/