Advertisment

டூவீலர் லோன் குறைந்த வட்டியில்… எந்தந்த வங்கிகள்னு பாருங்க!

Two wheeler loans starting at 6.85% – Check which bank is offering the lowest interest rate: குறைந்த வட்டி விகிதத்தில் இரு சக்கர வாகன கடன் வழங்கும் வங்கிகள் இவைதான்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டூவீலர் லோன் குறைந்த வட்டியில்… எந்தந்த வங்கிகள்னு பாருங்க!

Tamil Business Bank Loan For Two Wheeler : கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால்,இந்த பாதிப்பை தடுக்கும் வகையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தொற்று அபாயம் இன்னும் குறைந்தபாடில்லை. இதனால் ஒவ்வொருவரும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, தங்களை நோயில் இருந்து காத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

Advertisment

இந்த நேரத்தில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை விட தனிப்பட்ட வாகனத்தில் பயனம் செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அதில் இரு சக்கர வாகனம் வைத்திருப்பது, அலுவலகத்திற்கான அவர்களின் தினசரி பயணத்திற்கு எளிதான மற்றும் மலிவு வழிகளில் ஒன்றாக உள்ளது. இதனால் தற்போது நீங்கள் இரு சக்கர வாகனம் வாங்கத் திட்டமிடுகிறீர்கள், ஆனால் உங்களிடம் நிதி பற்றாக்குறை ஏற்பட்டால், கவலை வேண்டாம், ஒரு ஸ்கூட்டர் அல்லது சூப்பர் பைக்கை நீங்கள் சொந்தமாக்க பல்வேறு வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்குகின்றன.

இரு சக்கர வாகனக் கடன் என்பது ஸ்கூட்டர் அல்லது பைக்கை வாங்குவதற்கான எளிய வழியாகும், ஏனெனில் இது மலிவான EMI-களில் தொகையைத் திருப்பிச் செலுத்த உங்களை அனுமதிக்கிறது. இரு சக்கர வாகனக் கடனைப் பெற நீங்கள் விரும்பினால், பல்வேறு கடன் வழங்கும் நிறுவனங்களின் கடன் சலுகைகளை ஒப்பிட்டுப் பார்க்கவும். தகுதி அளவுகோல்கள், வட்டி விகிதங்கள், செயலாக்கக் கட்டணம், திருப்பிச் செலுத்தும் காலம், கடன் மதிப்பு (LTV) விகிதம் மற்றும் கட்டணங்கள் போன்ற பல்வேறு காரணிகளில் கடன் சலுகைகளை ஒப்பிடவும். உங்கள் கடனளிப்பவர் எவ்வளவு நிதியளிக்கிறார் என்பதையும், நீங்கள் எவ்வளவு முன்பணம் செலுத்த வேண்டும் என்பதையும் சரிபார்க்கவும்.

கூடுதலாக, இரு சக்கர வாகனக் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், உங்களிடம் கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் உள்ளதா எனச் சரிபார்க்கவும். நல்ல கிரெடிட் ஸ்கோர் குறைந்த வட்டி விகிதத்தில் கடனைப் பெற உதவும். இரு சக்கர வாகனத்திற்கு தற்போது 6.85% என குறைந்த வட்டி விகிதத்தில் பேங்க் ஆஃப் இந்தியா கடன் வழங்குகிறது. இது மற்ற வங்கி அல்லது நிதி நிறுவனங்களை விட குறைந்த வட்டி விகிதமாக தற்போது உள்ளது. கடனுக்கு விண்ணப்பிக்கும் போது உங்கள் வயது, வருமானம், அடையாளம் மற்றும் வருமானம் ஆகியவற்றைக் கண்டறிய நீங்கள் சில ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

நீங்கள் இரு சக்கர வாகனக் கடனைப் பெற விரும்பினால், கீழே உள்ள அட்டவணையைப் பார்க்கவும், அதில் 20 க்கும் மேற்பட்ட முக்கிய வங்கிகள் தற்போது இரு சக்கர வாகனக் கடனுக்கு குறைந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு வங்கிகளுக்கும் குறைந்த விளம்பர விகிதங்கள் மட்டுமே உள்ளன. வட்டி விகிதம் மாறுபடலாம், இது உங்கள் வயது, வருமானம், கிரெடிட் ஸ்கோர் மற்றும் உங்கள் கடனளிப்பவரின் தகுதித் தேவைகளைப் பொறுத்து இருக்கும்.

ஒவ்வொரு வங்கிக்கும் மூன்று ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்ட ரூ. 1 லட்சத்திற்கான இரு சக்கர வாகனக் கடனுக்கான குறியீட்டு EMIகளும் அட்டவணையில் உள்ளன. இவை மாறுதலுக்கு உட்பட்டது.

இரு சக்கர வாகனக் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் முன்னணி வங்கிகளால் தற்போது வழங்கப்படும் EMI விவரம் இதோ...

publive-image

இந்த தகவல்களை பயன்படுத்தி நீங்கள் உங்களது இருசக்கர வானத்திற்கு எந்த வங்கியில் கடன் பெறலாம் என்பதை முடிவு செய்துகொள்ளலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Business Loans Interest Rates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment