Advertisment

அரபு நாடுகள் டு இந்தியா... இரட்டிப்பாகும் விமான கட்டணம் - என்ன காரணம்?

UAE India Flight cost high: வரும் மாதங்களில் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வர விமான கட்டணம் இரட்டிப்பாக இருக்கும் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அரபு நாடுகள் டு இந்தியா... இரட்டிப்பாகும் விமான கட்டணம் - என்ன காரணம்?

Flight tickets to India from UAE could double in July, August: கோடை விடுமுறையின் போது பல குடும்பங்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப திட்டமிடுவார்கள் என்பதால், அரபு நாடுகளில் இந்திய நகரங்களுக்கான விமான கட்டணம் ஜூலை மற்றும் ஆக்ஸ்ட் மாதத்தில் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Advertisment

குறிப்பாக, துபாயிலிருந்து இந்தியாவுக்கு வர விமான கட்டணம் இரட்டிப்பாக இருக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஏனென்றால், கொரோனா கட்டுப்பாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தளர்த்தப்பட்டுள்ளது. துபாயிலிருந்து பயணம் மேற்கொள்ள ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழோ அல்லது வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநர் (GDRFA) அல்லது அடையாள, குடியுரிமை, சுங்கம், துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்திடம் ஒப்புதல் பெறவோ தேவையில்லை.

கிடைத்த தகவலின்படி, ஜூன் 11 அன்று துபாயிலிருந்து டெல்லிக்கு செல்ல குறைவான விமானக் கட்டணம் ரூ7,229 ஆகும். அதேவேளை, ஒரு மாதம் கழித்து ஜூலை 11 அன்று துபாய்-டெல்லி குறைந்த விமானக் கட்டணம் செக் செய்தால் ரூ14,400 ஆக டபுள் மடங்கு அதிகரித்துள்ளது.

கலதாரி இன்டர்நேஷனல் டிராவல் சர்வீஸ் மேலாளர் மீர் வாசிம் ராஜா கூறியதாவது, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் விமானக் கட்டணங்கள் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக ஜூலை 8 முதல் 11 வரையிலான ஈத் அல் அதா நாட்களில், பெரும்பாலான விமான டிக்கெட்கள் விற்பனை செய்து முடிந்துவிட்டது. ஐரோப்பாவுக்கான விமானக் கட்டணம் ஈத் காலத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளது. அப்போது, பள்ளி விடுமுறை என்பதால ஏரளாமான குடும்பத்தினர் ஊருக்கு திரும்புவதால், 7 முதல் 10 நாள்கள் வரை விமான கட்டணம் அதிகமாக இருக்கும். அதேபோல், பள்ளிகள் மீண்டும் திறக்கும் சமயத்திலும், விமானக் கட்டணம் அதிகரிக்கும் என்றார்.

அதேசமயம், சில மக்கள் விமான கட்டணம் அதிகமாக இருப்பதால், திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும், தள்ளிவைத்துவிட்டதாகவும் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Flight Dubai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment