/tamil-ie/media/media_files/uploads/2022/06/tamil-indian-express-2022-06-10T161757.764.jpg)
யூகோ வங்கி டிச.2ஆம் தேதிமுதல் FD விகிதங்களை உயர்த்தியுள்ளது.
UCO Bank Fixed Deposit Rates 2022: பொதுத்துறை கடன் வழங்கும் UCO வங்கி, ரூ.2 கோடி ரூபாய்க்கு குறைவான வைப்புத்தொகைக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்களை 135 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது.
வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, திருத்தப்பட்ட FD விகிதங்கள் வெள்ளிக்கிழமை (டிச.2) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
தற்போது, வங்கியானது 444 நாள்கள் மற்றும் 666 நாள்கள் முதிர்வு காலத்துடன் தனது நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களையும் அதிகரித்துள்ளது.
மூத்த குடிமக்கள்
மூத்த குடிமக்கள் அல்லாத சில்லறை முதலீட்டாளர்கள் 666 நாள்களில் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 6.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7% ஆகும்.
மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு, UCO வங்கி இப்போது FDகளில் 2.9% வருமானத்தை வழங்குகிறது. நாள்கள், 151-180 நாட்களுக்கு 5% சதவீதமும், 181-364 நாள்களுக்கு 6 சதவீதமும், ஒரு வருட காலத்திற்கான FDகளுக்கு 6.35% சதவீதமும் வட்டி கிடைக்கும்.
வங்கி இப்போது 444 மற்றும் 666 நாள்கள் தவிர ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு 6.2 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. 444 நாள்களுக்கான டெபாசிட்டுகளுக்கு 6.25% வருமானமும், 666 நாட்களுக்கு 6.5% வருமானமும் கிடைக்கும்.
மேலும், 666 நாள்களுக்கு நிலையான வைப்புத்தொகையில் மூத்த குடிமக்களுக்கு 7% வருமானத்தை வங்கி வழங்குகிறது. ஒருவர் ரூ.2 லட்சத்தை 666 நாள்களுக்கு முதலீடு செய்தால், அவர் அல்லது அவள் ரூ.25,545 வட்டியைப் பெறுவார், முதிர்வுத் தொகை ரூ.2,25,545 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.