இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் புதிய விதிப்படி, எந்த ஆதாரமும் இல்லாமல் குடிமக்கள் தங்கள் ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற முடியாது.
UIDAI வழங்கிய சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, ஆதார் அட்டையில் உள்ள முகவரி விவரங்களை மாற்ற விண்ணப்பிப்போர், ஏதேனும் முகவரிச் சான்றையும் கண்டிப்பாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டை என்பது இந்திய அரசாங்கத்தின் சார்பாக வழங்கிய 12 இலக்க தனிநபர் அடையாள எண் ஆகும்.அதிலிருக்கும் விவரங்கள் சரியாக இருக்க வேண்டியது அவசியம். உங்களது முகவரி சரியாக இல்லையென்றால், அரசின் சில நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம்
ஆதார் அட்டையில் முகவரியை மாற்றும் வழிமுறை
ஆதார் அட்டையில் உள்ள முகவரியை எளிதாக, Aadhaar issuing authority-யின் அதிகாரப்பூர்வ தளத்தில் மாற்றிவிடலாம். அதற்குக் கீழே இருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றவும்
step 1: ssup.uidai.gov.in/ssup/ என்ற UIDAIயின் அதிகாரப்பூர்வ இணையத்திற்கு முதலில் செல்ல வேண்டும்
step 2: அதில் 'Proceed to Update Aadhaar' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
step 3: அடுத்ததாக, அதில் கேட்கப்படும் ஆதார் கார்ட் விவரங்களை பதிவிட வேண்டும். தொடர்ந்து, captcha code வெரிஃபை செய்திட வேண்டும்.
step 4: உங்களது மொபைல் நம்பரை பதிவிட்டு, செல்போனுக்கு வரும் OTP நம்பரை பதிவிட வேண்டும்
step 5: புதிய முகவரியும், ஆதார் கார்ட் தகவல்களையும் பதிவிட வேண்டும்
step 6:UIDAI அனுமதி அளித்துள்ள பாஸ்போர்ட், வாகன ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட 32 சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை முகவரி சான்றிதழாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வளவுதான், உங்களின் ஆதாரில் புதிய முகவரி மாற்றப்பட்டிருக்கும்.
ஆதாரில் முகவரியை மாற்ற இனிமேல் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயம் என்பதை சமீபத்தில் UIDAI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.