ஆதார் அட்டை அனைத்து முக்கிய விவகாரங்களுக்கும் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, பான் அட்டை, யு,ஏ.என் ஆகியவற்றில் ஆதார் அடையாள அட்டை எண்ணை சேர்ப்பது கட்டாயம் ஆகும். அதே போல, அரசு வேலைகளுக்கும் ஆதார் கட்டாயம் ஆகும்.
அத்தகைய முக்கிய தகவல்களை கொண்ட ஆதாரில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், இப்போது ஒரு எண்ணைத் தொடர்புகொண்டு அதைத் தீர்க்கலாம்.
ஆதார் பயனாளர்கள் 1947 என்ற இலவச எண்ணை டயல் செய்வதன் மூலம் அனைத்து பிரச்சினைக்கும் ஒரே போன் காலில் தீர்வு காணலாம். இந்த நம்பரின் முக்கியம்சம் என்னவென்றால், 12 வெவ்வேறு மொழிகளில் உதவுகிறது தான்.
UIDAI வெளியிட்டுள்ள ட்வீட்டில், "ஆதார் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் இனி ஒரே தொலைபேசி அழைப்பின் மூலம் கையாளப்படும்.
ஆதார் ஹெல்ப்லைன் 1947 இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, ஒரியா, பெங்காலி, அஸ்ஸாமி மற்றும் உருது ஆகிய மொழிகளில் கிடைக்கிறது.
இந்த எண் நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டைக் குறிக்கும் என்பதால், இதனை எளிதாக நினைவில் வைத்துகொள்ள முடியும்.
இந்த 1947 எண்ணானது 24 மணிநேரமும், வாரத்தில் 7 நாட்களும் IVRS பயன்முறையில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் கட்டணமில்லா எண்ணாகும்.
இந்நிறுவனத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்பு மையப் பிரதிநிதிகள் உள்ளனர். அதே போல், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பிரதிநிதிகள் இருப்பார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil