இப்போ இதுதான் சேஃப்டி… Masked Aadhar டவுன்லோட் செய்து வச்சுக்கோங்க!

மாஸ்க் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகளை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

ஆதார் அட்டையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வங்கிக் கணக்கு, பான் அட்டை போன்வற்றில் ஆதார் எண்ணை சேர்ப்பது கட்டாயமாகிவிட்டது. அனைத்து அரசு வேலைகளுக்கும் தற்போது ஆதார் அட்டை அவசியம். அத்தகைய முக்கிய ஆவணத்தை, தவறாக யாரும் பயன்படுத்திடக்கூடாது என்பதற்காக, ஆதார் ஆணையம் மாஸ்க் ஆதார் என்ற பிரத்யேக ஆதார் ஒன்றை வழங்குகிறது.

ஆதார் ஆணையம் மூலம் முதலில் வழங்கப்படும் ஆதார் அட்டையில் ஆதார் எண்ணின் 12 இலக்கங்களும் வெளிப்படையாக இருக்கும். ஆனால், இந்த மாஸ்க் ஆதாரில், கடைசி 4 எண்கள் மட்டுமே வெளிப்படையாக இருக்கும். அதாவது, ஆதாரின் நம்பரின் முதல் 8 எண்கள் மாஸ்க் ஆதாரில் “xxxx-xxxx” என இடம்பெற்றிருக்கும். இதன் மூலம், ஆதார் கார்டை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது.

மாஸ்க் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்ய, நீங்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

  • முதலில், UIDAI வலைத்தளத்திற்குச் சென்று, ‘ஆதார் பதிவிறக்கம்’ என்ற ஆப்ஷனுக்கு செல்லவும்.
  • ஆதார் / விஐடி / பதிவு ஐடியின் ஆப்ஷனை தேர்ந்தெடுத்து Masked ஆதார் விருப்பத்தை டிக் செய்ய வேண்டும்.
  • திறக்கும் பக்கத்தில் தேவையான விரவங்களை உள்ளிட்டு ‘Request OTP’கிளிக் செய்ய வேண்டும்.
  • பின், ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
  • அடுத்ததாக, OTP எண்ணை அதற்கான இடத்தில் டைப் செய்து, மாக்ஸ் ஆதாரை டவுன்லோட் செய்யலாம்.

தற்போது, நீங்கள் டவுன்லோடு செய்திருக்கும் ஆதார் கார்ட் பிடிஎஃப் வடிவத்தில் இருக்கும். அதனை திறந்திட, பாஸ்வேர்ட் அவசியம் ஆகும். அதை திறப்பதற்கான பாஸ்வேர்ட் உங்களில் மெயில் ஐடிக்கு வந்திருக்கும்.

விமான நிலையங்களிலும், ரயில் டிக்கெட் சோதனையின்போதும், மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்கவும் பயன்படுத்தலாம். ஆனால், ஓய்வூதியம், சிலிண்டர் மானியம் போன்ற அரசுத் திட்டங்களுக்கு மாஸ்க் ஆதார் பயன்படுத்த இயலாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Uidai released masked aadhar card for safety purpose

Next Story
ஆன்லைனில் அதிகம் ஆர்டர் செய்பவரா? உங்களை கண்காணிக்க அரசு உத்தரவு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com