How To Lock or Unlock Aadhar Card From UIDAI update alert : இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டை ஏறக்குறைய அனைத்து மக்களும் பெற்றுவிட்ட நிலையில், இந்த ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டும் என்று பலரும் ஆதார் அலுவலகத்தை நாடி செல்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல், ஆதாரை வழங்கும் அமைப்பான யு.ஐ.டி.ஏ.ஐ. தொடர்ந்து மக்கள் சந்தித்து வரும் ஆதார் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய சிறப்பான பல சேவைகளை வழங்கி வருகின்றனர்.
ஆரம்பத்தில் ஆதார் அட்டை ஒரு அடையாள அட்டையாகவே அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு பல்வேறு முக்கிய அரசு சேவைகள் மற்றும் சலுகைகளைப் பெற ஆதார் அவசியமாகிவிட்டது. ஆதார் அட்டையை இணைய தளம் இருக்கும் அனைத்து இடங்களிலும் அணுக இயலும். ஆனாலும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் போதுமான இணைய சேவை இல்லை. இப்பகுதிகளில் வாழும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு சிறப்பான முடிவை எட்டியுள்ளது UIDAI. இனிமேல் டிஜிட்டல் முறையில் ஆதார் அட்டையை பெறுவது. ஆதார் லாக் மற்றும் அன்லாக் சேவைகளை இணையமற்ற முறையில் பெற வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையுடன் நீங்கள் இணைத்த எண்ணில் இருந்து 1947 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்தால் மட்டும் போதுமானது. உங்களுக்கு தேவையான அனைத்து ஆதார் தொடர்பான உதவிகளும் கிடைத்துவிடும்
GVID என டைப் செய்து இடம் விட்டு உங்கள் ஆதார் அட்டையின் கடைசி 4 இலக்க எண்களையும் டைப் செய்து 1947 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்.
virtual ID-ஐ பெறுவதற்கு நீங்கள் RVID செய்து இடம் விட்டு உங்கள் ஆதார் அட்டையின் கடைசி 4 இலக்க எண்களையும் டைப் செய்து 1947 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்.
ஓ.டி.பியை பெறுவது எப்படி?
ஆதார் எண் அல்லது VID கொண்டு ஓ.டி.பியை பெற இயலும்.
ஆதார் மூலம் ஓ.டி.பியை பெற GETOTP என்று டைப் செய்து உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கை 1947 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
வி.ஐ.டி மூலம் ஓ.டி.பியை பெற GETOTP- என டை டைப் செய்து விர்ச்சுவல் ஐடியின் கடைசி ஆறு இலக்க எண்களை 1947 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
ஆதார் அட்டையை லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி?
முதலில் ஒ.டி.பியை பெற்ற பிறகு, 1947 என்ற அதே எண்ணுக்கு ENABLEBIOLOCK என டைப் செய்து பிறகு ஆதாரின் கடைசி நான்கு இலக்க எண்களை டைப் செய்து இடம் விட்டு 6 இலக்க ஓ.டி.பியை உள்ளீடாக வழங்கவும்.
VID மூலம் லாக் செய்ய வேண்டும் என்றால்
முதலில் ஒ.டி.பியை பெற்ற பிறகு, 1947 என்ற அதே எண்ணுக்கு ENABLEBIOLOCK என டைப் செய்து பிறகு வி.ஐ.டியின் கடைசி ஆறு இலக்க எண்களை டைப் செய்து இடம் விட்டு 6 இலக்க ஓ.டி.பியை உள்ளீடாக வழங்கி எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.
இந்த முறையை பயன்படுத்தி ஆதார் அட்டையை லாக் செய்யவோ அல்லது அன்லாக் செய்யவோ முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil