Link voter ID with Aadhaar Card: இந்தியாவில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை இருக்கும் பட்சத்தில் தான் நீங்கள் உள்ளாட்சி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வாக்களித்து உங்கள் பிரதிநிதியை தேர்வு செய்ய முடியும்.
பெயர், வயது, முகவரி என அனைத்தும் இருப்பதால் நீங்கள் ஒரு சொத்து வாங்கும் போதும், பாஸ்போர்ட் வாங்கும் போதும் ஏன் சிம்கார்டுகள் வாங்கும் போது கூட முக்கிய ஆவணமாக பெறப்படுகிறது. ஒருவருக்கு ஒரே வாக்காளர் அடையாள அட்டைமட்டுமே உள்ளது.
தற்போது இந்த வாக்காளர்கள் அடையாள அட்டையையும் ஆதார் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று ஆதார் அறிவித்துள்ளது. 2015ம் ஆண்டு ஆதார் அடையாள அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொள்ள இறுதியில் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தை அடைந்தது.
PF மானியத் திட்டம்; இதுவரை பயன் பெற்றுள்ள 40 லட்சம் பேரில் தமிழகத்தில் 5.35 லட்சம் பயனாளிகள்
தனிப்பட்ட தரவுகள் தொடர்பான உரிமைகளை மீறும் வகையில் இந்த நடவடிக்கை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. தற்போது ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்துக் கொள்ள தடை ஏதும் இல்லை என்று அறிவிப்பு வெளியான நிலையில் விரைவில் இதுவும் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil