/tamil-ie/media/media_files/uploads/2022/04/aadhar.jpg)
சமீப காலமாக போலி ஆதார் கார்டுகளை மோசடி சம்பவங்களுக்கு உபயோகிப்பது அதிகரித்து வருகிறது. பெரும்பாலான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் போலியான ஆதார் கார்டு அல்லது நம்பர்களை பயன்படுத்துகின்றனர். எனவே, அதனை தடுப்பதற்காக, UIDAI முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த ட்வீட்டில், அனைத்து விதமான ஆகார் கார்டுகளையும் நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ செக் செய்யலாம். இ ஆதாரில் உள்ள QR கோட் ஸ்கேன் செய்யுங்கள். மேலும், https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar என்கிற தளத்தில் 12 டிஜிட் ஆதார் நம்பரை பதிவிட்டு செக் செய்யுங்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதார் கார்டு போலியா என்பதை ஆன்லைனில் கண்டறியும் முறை
- முதலில் UIDAIயின் https://resident.uidai.gov.in/offlineaadhaar தளத்திற்கு செல்ல வேண்டும்
- அதில் 'Aadhaar Verify' ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும். இல்லையெனில், நீங்கள் நேரடியாக https://myaadhaar.uidai.gov.in/verifyAadhaar தளத்திற்கு செல்லலாம்.
- தொடர்ந்து, 12 டிஜிட் ஆதார் எண் அல்லது 16 டிஜிட் virtual ID பதிவிட வேண்டும்.
- அடுத்த திரையில், நம்பரை டைப் செய்துவிட்டு, திரையில் கேட்கப்படும் security codeஐ டைப் செய்தபிறகு, OTP நம்பர் verify கேட்கப்படும்.
- ஆதாருடன் பதிவு செய்துள்ள மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவிட வேண்டும்.
- இந்த பிராசஸ் முடிவடைந்ததும், உங்கள் ஆதார் கார்டு உண்மையானதா அல்லது போலியா என்பது திரையில் தோன்றும்.
- அத்துடன், உங்கள் பெயர், மாநில விவரம், வயது, பாலினம் என ஆதாரில் இடம்பெற்றிருக்கும் அனைத்து தகவல்களும் திரையில் தோன்றும்.
அதுமட்டுமின்றி, ஆதார் கடிதம்/ eAadhaar/ ஆதார் PVC கார்டில் எழுதப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் ஆதாரை ஆப்லைனில் சரிபார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.