/indian-express-tamil/media/media_files/2025/10/16/uk-2025-10-16-18-54-58.jpg)
வெளிநாட்டுப் பணியாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்குச் சுமை: இங்கிலாந்தில் 'குடிவரவுத் திறன் கட்டணம்' 32% உயர்வு
இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்கள் வெளிநாட்டவர்களை பணியமர்த்தும் நடைமுறையை பாதிக்கும் வகையில், 'குடிவரவுத் திறன் கட்டணத்தை' (Immigration Skills Charge) கணிசமாக உயர்த்துவதாக உள்துறை அலுவலகம் (Home Office) அறிவித்துள்ளது. இந்தக் குடிவரவுத் திறன் கட்டணம் என்பது, திறமையான வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு ஸ்பான்சர் செய்யும் முதலாளிகளால் செலுத்தப்படுகிறது. இந்தக் கட்டணத் தொகை, உள்நாட்டுப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக மீண்டும் முதலீடு செய்யப்படுகிறது.
உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளபடி, இந்தக் கட்டணம் தற்போதுள்ள தொகையிலிருந்து 32% அதிகரிக்கப்பட உள்ளது. ஒரு நிறுவனம், திறன்மிக்கப் பணியாளர் (Skilled Worker) விசா அல்லது முதுநிலை/சிறப்புப் பணியாளர் (Senior or Specialist Worker) விசாவுக்கு விண்ணப்பிக்கும் ஒருவருக்கு ஸ்பான்சர்ஷிப் சான்றிதழை (Certificate of Sponsorship) ஒதுக்கும்போது இந்தக் கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதுவே 'குடிவரவுத் திறன் கட்டணம்' என்று அழைக்கப்படுகிறது.
தற்போதைய கட்டணம் (நடுத்தர/பெரிய நிறுவனங்களுக்கு) முதல் 12 மாதங்களுக்கு £1,000. அதன்பிறகு ஒவ்வொரு கூடுதல் 6 மாதங்களுக்கும்:£500, உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் முதல் 12 மாதங்களுக்கு £1,320. அதன்பிறகு ஒவ்வொரு கூடுதல் 6 மாதங்களுக்கும் £660
வெளிநாட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கான செலவு அதிகரிக்கும் என்பதால், இங்கிலாந்து நிறுவனங்கள் பணியமர்த்துவதைத் தடுக்கவே இந்தக் கட்டணத்தை உயர்த்துவது ஆகும். நாட்டின் புதிய குடிவரவுக் கட்டுப்பாடுகளால், வெளிநாட்டுப் பணியாளர்கள் இங்கிலாந்தில் வேலை தேடுவது கடினமாக இருக்கும்.
2025 மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இங்கிலாந்தின் குடிவரவு குறித்த வெள்ளை அறிக்கையில் (White Paper), வெளிநாட்டுப் பணியாளர்கள் இங்கிலாந்தில் வேலை பெறுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் பல புதிய விதிகள் முன்மொழியப்பட்டன. அவற்றில் இந்தக் குடிவரவுத் திறன் கட்டணத்தை உயர்த்துவதும் முக்கியப் பரிந்துரையாகும்.
ISC கட்டணம் செலுத்துவதில் சில விலக்குகளும் உள்ளன. இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்த விசாவில் இருந்து, திறன்மிக்கப் பணியாளர் அல்லது முதுநிலை/சிறப்புப் பணியாளர் விசாவுக்கு மாறுபவருக்கு ஒரு நிறுவனம் ஸ்பான்சர் செய்தால், அந்தக் கட்டணம் பொருந்தாது.
இந்தக் குடிவரவுத் திறன் கட்டணத்தை முதலாளிதான் செலுத்த வேண்டும்; வெளிநாட்டுப் பணியாளர் அல்ல. ஸ்பான்சர் செய்த பணியாளரை இந்தச் செலவையோ அல்லது விண்ணப்பம் தொடர்பான வேறு எந்தச் செலவையோ செலுத்தச் சொன்னால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.