Advertisment

தொழிலாளர் கணக்கெடுப்பு காலாண்டு தரவுகள்: செப்டம்பர் மாதம் வரை வேலையின்மை விகிதம் குறைவாக பதிவு

தொழிலாளர் கணக்கெடுப்பு காலாண்டுக்கான தரவுகளின் படி, செப்டம்பர் மாதம் வரை வேலையின்மை விகிதம் குறைவான அளவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Labour force

நகர்ப்புறங்களுக்கான காலாண்டு வேலையின்மை விகிதம் ஜூலை-செப்டம்பரில் 6.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 6.6 சதவீதமாக இருந்தது. இது தொடர்பாக பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வே (PLFS) தரவு முடிவுகளை, தேசிய புள்ளியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. கடந்த 2018-ன் ஏப்ரல் - ஜூன் காலத்தில் PLFS தொடங்கப்பட்டதில் இருந்து பதிவான தரவுகளில், இதுவே குறைந்தபட்சம் எனக் கண்டறியப்பட்டுளது. இவை தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR) மற்றும் தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் (WPR) ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Quarterly Periodic Labour Force Survey: Unemployment rate at record low in September quarter

 

LFPR என்பது வேலை செய்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் அல்லது வேலைக்காக காத்திருப்பவர்களின் விகிதங்களைக் கூறுவது. இது ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 50.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக PLFS தரவுகள் கூறுகின்றன. இவை, வேலை பார்ப்பவர்களின் சதவீதம் 47.2-ஆக அதே காலகட்டத்தில் உயர்ந்துள்ளதாக காட்டுகிறது. இந்த கணக்கீடு பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் குறு, சிறு, நடுத்தர  நிறுவனங்களில் பணி நியமனத்தை சுட்டிக்காட்டுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு ஜனவரி-மார்ச் மாதங்களில் வேலையின்மை விகிதம் 6.7 சதவீதமாக உயர்ந்த பிறகு, நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து இரண்டாவது காலாண்டில் சரிந்துள்ளது. மேலும் பாலின அடிப்படையில் பார்த்தால், ஜூலை-செப்டம்பர் மாதங்களில் பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 8.4 சதவீதமாக மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. எனினும், இவை ஐந்தாவது காலாண்டில் 8 சதவீதத்திற்கு மேல் இருந்தது. ஆண்களுக்கு வேலையின்மை விகிதம் ஜூலை-செப்டம்பரில் 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது காலாண்டிற்கு முன்பு 5.8 சதவீதமாகவும், ஒரு வருடத்திற்கு முன்பு 6 சதவீதமாகவும் இருந்தது.

காலாண்டு PLFS தரவுகள் நகர்ப்புறங்களுக்கான தற்போதைய வாராந்திர நிலையை அடிப்படையாகக் கொண்டு வேலையின்மை விகிதம், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் மற்றும் தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் போன்ற தொழிலாளர் சந்தை குறிப்புகளை அளவிடுகிறது. தற்போதைய வாராந்திர நிலவரப்படி, கணக்கெடுப்பு தேதிக்கு முந்தைய கடைசி ஏழு நாள்களின் குறுகிய காலத்தின் அடிப்படையில் தொழிலாளர் செயல்பாடு நிலை தீர்மானிக்கப்படுகிறது.

PLFS இன் கீழ் வருடாந்திர வேலையின்மை மற்றும் தொழிலாளர் எண்ணிக்கை புள்ளிவிவரங்களுக்கு, வழக்கமான அணுகுமுறையின் மூலம் நீண்ட காலத்திற்கு இவை கணக்கெடுக்கப்படுகிறது. 

மேலும், ஊதியம் பெறுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள் முன்னேற்றம் கண்டுள்ளதாக PLFS தகவல்கள் எடுத்துகாட்டுகின்றன. வழக்கமான கூலி வேலைகளில் ஈடுபடும் நபர்களின் பங்கு ஜூலை-செப்டம்பரில் 23.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 22 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் - ஜூன் மாத காலகட்டத்தில் இவை 22.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொருபுறம், முதலாளிகளாக இருப்பவர்களின் சதவீதம் 14.4 சதவீதத்தில் இருந்து 15.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.  காலாண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படும் PLFS கணக்கெடுப்புகளின் கடைசி தொகுப்பு இதுவாகும். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு மாதாந்திர காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்புகளை வெளியிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment