மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை புதன்கிழமை (பிப்.1) தாக்கல் செய்தார்.
அப்போது, சிகரெட் மீதான வரியை 16 சதவீதம் உயர்த்தும் அதே வேளையில் தங்கக் கட்டிகளில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கான அடிப்படை சுங்க வரியை உயர்த்துவதாக அறிவித்தார்.
ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக இறால் தீவனத்தின் மீதான சுங்க வரியையும் அரசாங்கம் குறைக்கும் என்று அவர் கூறினார்.
மேலும், மொபைல் போன் உற்பத்திக்கான சில உள்ளீடுகளின் இறக்குமதிக்கான சுங்க வரி குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தார்.
அதேவேளையில், டிவி பேனல்களின் சுங்க வரி 2.5 சதவீதமாகவும், சமையலறை மின்சார புகைபோக்கிக்கான சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வரி குறைப்பு
- டிவி பேனல்களின் திறந்த செல்களின் பகுதிகளுக்கான சுங்க வரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
- மொபைல் போன் உற்பத்திக்கான சில உள்ளீடுகளின் இறக்குமதி மீதான சுங்க வரியை குறைக்கப்படுகிறது.
- ஆய்வக வைரங்கள் தயாரிக்கப் பயன்படும் விதைகள் மீதான அடிப்படை சுங்க வரியை அரசு குறைக்கிறது.
- ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் இறால் தீவனத்தின் மீதான சுங்க வரியை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
வரி அதிகரிப்பு
- சிகரெட் மீதான வரி 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
- ரப்பர் மீதான அடிப்படை இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- தங்கக் கட்டிகளால் செய்யப்பட்ட பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.
- சமையலறை மின்சார புகைபோக்கிக்கான சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/