/indian-express-tamil/media/media_files/xbgPMApKVyr8LsVOYy2F.jpg)
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Union Budget 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (ஜூலை 23) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மத்திய பட்ஜெட்டை நேரலையில் பார்ப்பது எப்படி என்பதை இப்போது தெரிந்துக் கொள்வோம்.
18வது லோக்சபாவின் முதல் அமர்வு ஏற்கனவே ஜூன் 24 மற்றும் பின்னர் ஜூன் 26 அன்று தொடங்கியது, மூன்று முறை பா.ஜ.க எம்.பி.,யாக இருந்த ஓம் பிர்லா, இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 22-ம் தேதி தொடங்கியது, மற்றும் பட்ஜெட் தாக்கல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும்.
மத்திய பட்ஜெட் என்பது அரசாங்கத்தின் நிதிகளின் முக்கிய நிதிநிலை அறிக்கை மற்றும் வரவிருக்கும் நிதியாண்டிற்கான வருவாய் மற்றும் செலவினங்களின் மதிப்பீட்டை உள்ளடக்கியது. இந்த ஆண்டு, 2024ல், லோக்சபா தேர்தல் காரணமாக பட்ஜெட் இரண்டு முறை அறிவிக்கப்பட்டது, இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1, 2024 அன்று தாக்கல் செய்யப்பட்டது, மேலும் மத்திய பட்ஜெட் நாளை (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட உள்ளது.
பா.ஜ.க.,வின் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சராக தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார், நாளை (ஜூலை 23 ஆம் தேதி) 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் 2024ஐ தாக்கல் செய்கிறார். இதன் மூலம், தொடர்ந்து ஏழு மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுவார், மேலும் 6 பட்ஜெட்களை சமர்ப்பித்த மொரார்ஜி தேசாயை பின்னுக்கு தள்ளினார். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
மத்திய பட்ஜெட் 2024: தேதி மற்றும் நேரம்
சமீபத்திய ஆண்டுகளில், மத்திய பட்ஜெட் எப்போதும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு, 2024 தேர்தல் ஆண்டாக இருந்ததால், இரண்டு முறை நிதியமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்தார்.
தற்போது மீண்டும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில், நிர்மலா சீதாராமன் மீண்டும் முழு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
2024-25ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறும்.
மத்திய பட்ஜெட் 2024: நேரலையில் பார்ப்பது எப்படி?
பட்ஜெட் உரை நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ சேனல்களான சன்சாத் டிவி மற்றும் தூர்தர்ஷன் மற்றும் ஒவ்வொரு சேனலின் சொந்த அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்தியன் எக்ஸ்பிரஸின் யூடியூப் கணக்கும் பட்ஜெட் உரையை ஸ்ட்ரீம் செய்யும்.
ஆங்கிலம் மற்றும் இந்தியில் கிடைக்கும் மத்திய பட்ஜெட் இணைய தளம் (www.indiabudget.gov.in), பட்ஜெட் 2024 ஆவணங்களுக்கு டிஜிட்டல் அணுகலையும் வழங்குகிறது. இது அரசியலமைப்பால் குறிப்பிடப்பட்ட வருடாந்திர நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கைகள் மற்றும் நிதி மசோதாக்கள் போன்ற பட்ஜெட் ஆவணங்களைக் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.