Union Budget 2024 Income Tax updates: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வரி விதிப்பின் கீழ் திருத்தப்பட்ட வருமான வரி அடுக்குகளை அறிவித்தார், இது வரி செலுத்துவோர் ஒரு வருடத்தில் சுமார் 17,500 ரூபாய் நிகர லாபத்தைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க:
நாடாளுமன்றத்தில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். அப்போது புதிய வரி விதிப்பின் கீழ் திருத்தப்பட்ட வருமான வரி அடுக்குகளை நிதியமைச்சர் அறிவித்தார்.
அதன்படி, ரூ3 லட்சம் வரையிலான சம்பளத்திற்கு வரி பூஜ்யம், ரூ 3 முதல் 7 லட்சம் வரை 5%, ரூ 7 முதல் 10 லட்சம் வரை 10%, ரூ 10 முதல் 12 லட்சம் வரை 15%, ரூ 12 முதல் 15 லட்சம் வரை 20 %, மற்றும் ரூ 15 லட்சத்திற்கு மேல் 30% ஆகும்.
குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் மீதான சுமையை குறைக்கும் நோக்கத்தில் வரி குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருத்தப்பட்ட அடுக்குகள் வந்துள்ளன. நிலையான வரி விலக்கு 50,000 ரூபாயில் இருந்து 75,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
வருமான வரிச் சட்டத்தை சுருக்கமாகவும், எளிதாகப் படிக்கவும், வழக்குகளைக் குறைக்கவும், "விரிவான ஆய்வு" ஒன்றையும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இப்பயிற்சி ஆறு மாதங்களில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்ட்-அப்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஏஞ்சல் வரியை ரத்து செய்ய அரசு முன்மொழிந்துள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“