Advertisment

சி.எஸ்.ஆர். செலவின் அடிப்படையில் டாப் 500 நிறுவனங்கள் இன்டெர்ன் 'ஒதுக்கீடு' பெற வாய்ப்பு- நிதிச் செயலாளர் பேட்டி

"ஒதுக்கீடு முறை" இந்த நிறுவனங்களின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) செலவினத்தின் அடிப்படையில் இருக்கும் என்று நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
CSR interns

Top 500 firms likely to get ‘quota’ for interns based on CSR spend

2024-25 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு தொகுப்பின் கீழ் தலைசிறந்த 500 நிறுவனங்களுடன் பேசவும், பயிற்சியாளர்களை (intern) எடுத்துக் கொள்வதற்கான "தன்னார்வ ஒதுக்கீட்டு முறையை" பரஸ்பரம் ஒப்புக்கொள்ளவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

Advertisment

"ஒதுக்கீடு முறை" இந்த நிறுவனங்களின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) செலவினத்தின் அடிப்படையில் இருக்கும் என்று நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

தொழில்துறையினருடன் கலந்தாலோசித்து பிறகு மற்ற விவரங்கள் முடிவு செய்யப்படும். CSR செலவின் அடிப்படையில், பரஸ்பரம் ஒப்புக்கொண்ட சில வகையான தன்னார்வ ஒதுக்கீட்டு முறையை (voluntary quota system) நாங்கள் கொண்டிருக்கலாம். அவர்களின், விநியோகச் சங்கிலியை திறமைக்காக பயன்படுத்தவும் நாங்கள் அனுமதிப்போம், என்று சோமநாதன் கூறினார்.

விளிம்புநிலையில் இருப்பவர்கள் இந்த இன்டர்ன்ஷிப் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் ஆர்வமாக உள்ளது.

நாங்கள் நிறுவனங்களுக்கு அவர்கள் வழக்கமாக பணியமர்த்தும் நபர்களை வழங்க மாட்டோம், ஏனெனில் அவர்கள் எப்படியும் வேலைக்கு அமர்தத போகும் நபர்களுக்கு மானியம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. எங்களிடம் எதிர்மறை பட்டியலும் இருக்கும்.

உதாரணமாக ஐஐடி, ஐஐஎம், பட்டயக் கணக்காளர்கள், செலவுக் கணக்காளர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், பெற்றோர் அரசு ஊழியராக இருப்பவர்கள் முதலானோர் இதில் வரமாட்டார்கள். சாதாரண ஆட்சேர்ப்பு வழிகளில் இருந்து வெளியேறிய மக்களுக்காக இது இருக்க வேண்டும் என நாங்க விரும்புகிறோம், ஆப்ஜக்டிவ் கிரைட்டீரியா மூலம் இன்டெர்ன்ஸ் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இது பொதுவான யோசனை, ஆனால் நாங்கள் செயல்படுத்தும் போது அதை இன்னும் உறுதிபடுத்துவோம். இது வடிவமைப்பு சவால்களை உள்ளடக்கியதாக இருக்கும், மேலும் அதை எவ்வாறு சிறப்பாகச் செய்வது என்பது குறித்த பரிந்துரைகளுக்கு நாங்கள் தயாராக இருப்போம்.

இவை சிறந்த 500 நிறுவனங்கள் என்பதால், தன் நற்பெயரை காப்பாற்ற வேண்டிய  தேவை இருக்கும், எனவே இன்டர்ன்ஷிப் தரம் நன்றாக இருக்கும், என்று சோமநாதன் கூறினார்.

இந்த தொகுப்பின் கீழ் உள்ள திட்டங்களின் திறன் பகுதியில் தனியார் துறையை ஈடுபடுத்துவது பிரதமர் நரேந்திர மோடியின் யோசனையாக இருந்தது என்று திட்டத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள வட்டாரங்கள் தெரிவித்தன.

திறன் திட்டங்களில் தனியார் துறையை ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் பிரதமரிடம் இருந்து வந்தது, இந்தத் திட்டங்களில் திறமையான பங்களிப்பை தனியார் துறையே செய்ய வேண்டும் என்றும், அதை அரசு மட்டும் செய்ய முடியாது என்றும் அவர் தனது அனுபவத்தின் அடிப்படையில் உறுதியாகக் கருதினார்’, என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்தார்.

செவ்வாயன்று தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் தாக்கல் செய்த 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேலை வாய்ப்பு மற்றும் திறமைக்கான பிரதமரின் தொகுப்பை அறிவித்தார்.

அவர்கள் வணிக சூழல்கள், பல்வேறு தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் 12 மாதங்கள் பயிற்சி பெறுவார்கள். பயிற்சி உதவித்தொகையாக மாதம் ரூ.5,000 மற்றும் ஒருமுறை உதவியாக ரூ.6,000 வழங்கப்படும். நிறுவனங்கள் தங்கள் CSR நிதியில் இருந்து பயிற்சி செலவையும், இன்டர்ன்ஷிப் செலவில் 10 சதவீதத்தையும் ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

Read in English: Top 500 firms likely to get ‘quota’ for interns based on CSR spend

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Union Budget
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment