scorecardresearch

Union Budget Highlights: ரயில்வே துறைக்கு கூடுதல் ஒதுக்கீடு முதல் தனிநபர் வருமான வரி வரை: 2023-24 பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை. தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Union Budget Highlights: ரயில்வே துறைக்கு கூடுதல் ஒதுக்கீடு முதல் தனிநபர் வருமான வரி வரை: 2023-24 பட்ஜெட் முக்கிய அம்சங்கள்

இன்று காலை 11 மணி-க்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த பட்ஜெட்-ல் உள்ள முக்கிய அம்சங்களை இதோ. 

1.50 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையிலான மாநிலங்களுக்கான வட்டியில்லா  கடன் வழங்கப்படுவது மேலும் ஓராண்டுக்கு தொடரும்.

2. கர்நாடகாவில் வறட்சி பாதிப்பு நிவாரணமாக ரூ.5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

3.இந்த ஆண்டு ரயில்வேதுறைக்கு ரூ.2.40 ஆயிரம் லட்சம் கோடி  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 மடங்கு அதிகமாகும்.

4. பிரதமரின் வீட்டுவசதி திட்டத்திற்கு ரூ 78,000 கோடி  ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ. 10 லட்சம்  கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

5. மீன்வளத்துறையில், பிரதமர் மத்சயா சம்பாதா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

6. பழங்குடியின வளர்ச்சிக்கு ரூ 15,000 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

7.  மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிக்க புதிய இயந்திரங்கள் வாங்கப்படும்.

8. மேலும் ஓராண்டுக்கு அந்தியோதயா திட்டத்தின் கீழ் உணவு தானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

9.இந்தியாவின் இந்த ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 7 %ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

10. 2023-24 பட்ஜெட்டில் உள்ளடக்கிய மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, பசுமை வளர்ச்சி, இளைஞர்கள், நிதித்துறை மேம்பாடு ஆகியவற்றில்  முன்னுரிமை அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11. குழந்தைகள் , வளர் இளம் பருவத்தினருக்கு டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். பழங்குடியினருக்கான ஏகலைவா பள்ளிகளில் 38,800 ஆரிசியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நியமிக்கப்படுவார்கள். 

13. ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை. தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Union budget highlights railways get a capital outlay of rs 2 4 lakh crores