Government relaxes the rules for FDI: இந்தியாவில் சரிவடைந்து வரும் பொருளாதார நிலையை சீராக்க நிலக்கரி சுரங்கம், டிஜிட்டல் மீடியா துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் நேரடி அந்நிய முதலீட்டிற்கான (FDI) விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் பிரகாஷ் ஜவடேகர், “இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான வாய்ப்பை நாங்கள் காண்கிறோம். கடந்த நிதியாண்டில் மிகப்பெரிய அளவில் நேரடி அந்நிய முதலீடு காணப்பட்டது. இதனால், தொடர்ந்து
“இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான வாய்ப்பை நாங்கள் காண்கிறோம், கடந்த நிதியாண்டில் மிகப்பெரிய அளவில் நேரடி அந்நிய முதலீடு காணப்பட்டது. இதனால் தொடர்ந்து, அந்நிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, அந்நிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இது தற்போதைய சூழலில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும். சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை கொண்டு வருவதன் மூலம், பெரும் நிறுவனங்கள் “ஒரு செங்கல் மற்றும் மோட்டார் கடையை நிறுவுவதற்கு முன்பு ஆன்லைனில் சில்லறை விற்பனையைத் தொடங்க முடியும். இது ஐகியா போன்ற நிறுவனங்களுக்கு பயனளிக்கும்” என்றனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, “நிலக்கரி சுரங்கம் அமைக்க நூறு சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், டிஜிட்டல் மீடியா துறையிலும் அரசு அனுமதியுடன் 26 சதவீத அந்நிய முதலீட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றனர். இந்தியாவில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரிசர்வ் வங்கி, ரூ.9.6 லட்சம் கோடி உபரி நிதியில் இருந்து 14 சதவீதத்தை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக ஆராய 6 உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று வங்கியால் அமைக்கப்பட்டது. இதையடுத்து, அந்தக் குழு தனது இறுதி அறிக்கையில், மத்திய அரசுக்கு 3 முதல்
5 ஆண்டுகளில் தவணை முறையாக உபரி நிதியை வழங்க பரிந்துரைத்தது. இதைத்தொடர்ந்து, நிதியாண்டு 2018-19ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியிடம் உபரியாகஉள்ள நிதியில் ரூ.1,23,414 கோடியும் மேலும் மறு பொருளாதார முதலீடு வரைவில் (இசிஎப்) கூடுதலாக உள்ள ரூ.52,637 கோடியையும் சேர்த்து மொத்தம் ரூ.1,76,051
கோடியை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.