pm-kisan-samman-nidhi-yojana | பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
பி.எம் கிசான் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகள் குடும்பங்களுக்கு அரசாங்கம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்குகிறது. இந்தத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.
மத்திய அரசின் முதன்மையான பணப் பரிமாற்றத் திட்டமான பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்துகான (பி.எம் கிசான்) நிதி ஒதுக்கீட்டை 13.33 சதவீதம் குறைத்துள்ளது.
2023-24 ஆண்டுகான மத்திய பட்ஜெட்டில், பி.எம் கிசான் திட்டத்துக்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2022-23 நிதியாண்டுகான பட்ஜெட் மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.68,000 கோடியை விட 13.33 சதவீதம் குறைவானது ஆகும்.
பி.எம் கிசான் திட்டத்தின் சமீபத்திய சுற்றில், 8.42-கோடி விவசாயிகள் ஆகஸ்ட்-நவம்பர், 2022 ஆகிய நான்கு மாத காலத்திற்கான தவணைத் தொகையைப் பெற்றுள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகள் குடும்பங்களுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்குகிறது. அந்தத் தொகையானது தலா ரூ. 2,000 வீதம் 4-மாதங்களுக்கு ஒரு முறை என 3 தவணைகளாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.
ஒரு நிதியாண்டில், PM கிசான் தவணை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 3 முறை நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. ஏப்ரல்-ஜூலை வரை முதல் தவணையும், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலம் இரண்டாவது தவணை மற்றும் டிசம்பர் முதல் மார்ச் வரையிலானது 3வது தவணைக்கான காலமாக கணக்கிடப்படுகிறது.
இந்த நிலையில், விவசாய நலத்துறை அமைச்சர் கைலாஷ் சவுத்திரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மாநிலங்கள் வழங்கிய பட்டியலின் அடிப்படையிலே பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி வழங்கப்படுகிறது. இதில் கிராஸ் செக் செய்தபோது, பெரும்பாலானோர் திட்டத்திற்கு தகுதியானவர்கள் இல்லை என்பதை கண்டறிய முடிந்தது” எனத் தெரிவித்தார்.
ஆக இந்தத் திட்டம் விவசாயிகள் கேஒய்சி சரியாக முடித்தால் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“