ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.5 சதவீதம் வரை வட்டி: நோட் பண்ணுங்க ப்ளீஷ்!

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Unity Small Finance Bank latest FD interest rates

அனைத்து தரப்பு மக்களாலும் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் விரும்பப்படுகின்றன. தற்போது யூனிட்டி மற்றும் சூர்யோதாய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் மூலம் FD களில் 9 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி விகிதத்தை வழங்குகின்றன.
அதாவது, பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) போன்ற பெரும்பாலான முதலீட்டுத் திட்டங்களைக் காட்டிலும் அதிக வட்டியை இந்த வங்கிகள் வழங்குகின்றன.

Advertisment

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் சமீபத்திய FD வட்டி விகிதங்கள்

1001 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் ஏழு நாட்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.5% முதல் 9.5% வரை வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள்.

டெபாசிட் வட்டி விகிதம் 14 ஜூன் 2023 முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 1001 நாட்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் 9% ஆக உள்ளது.

Advertisment
Advertisements

சூர்யோடே ஸ்மால் வங்கி

Suryoday Small Finance வங்கியானது 4% முதல் 9.1% வரையிலான நிலையான வைப்பு வட்டி விகிதங்களை பொது வாடிக்கையாளர்களுக்கு ஏழு நாட்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு வழங்கும்.
மூத்த குடிமக்கள் ஏழு நாட்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.5% முதல் 9.6% வரை வட்டி விகிதத்தைப் பெறுவார்கள்.

9.1% அதிகபட்ச வட்டி விகிதம் ஐந்தாண்டு காலத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த விகிதங்கள் ஜூலை 5, 2023 முதல் பொருந்தும்.

எனினும் ஸ்மால் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையிலான முதலீடு மட்டுமே காப்பீடு வரம்புக்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: