Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9 சதவீதம் வட்டி: இந்த இந்திய வங்கியை பாருங்க!

ஏழு நாள்களில் இருந்து பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு வங்கி இது 4.5% முதல் 9% வரை வட்டி விகிதங்களை பொதுமக்களுக்கும், 4.5% முதல் 9.5% வரை வட்டி விகிதத்தை மூத்தக் குடிமக்களுக்கும் வழங்கும்.

author-image
WebDesk
New Update
Mahila Samman Savings Certificate 2023

இந்தப் புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 9, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.

Unity Bank hikes Fixed Deposits rates: யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் (யூனிட்டி வங்கி) தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைகளில் நிலையான வைப்பு முதலீடுகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

இந்தப் புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 9, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இது, ₹2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு மட்டும் பொருந்தும்.

Advertisment

701 நாள்கள் டெபாசிட்

யூனிட்டி வங்கி 701 நாள்கள் டெபாசிட் திட்டத்துக்கு பொதுமக்களுக்கு 8.95 சதவீதம் வட்டியும், மூத்தக் குடிமக்களுக்கு 9.45 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.

1001 நாள்கள் டெபாசிட் திட்டத்தில் பொதுமக்களுக்கு 9 சதவீதமும், மூத்தக் குடிமக்களுக்கு 9.50 சதவீதம் வட்டியும் கிடைக்கும்.

தொடர்ந்து, 181 - 201 நாள்கள் மற்றும் 501 நாள்களுக்கு, யூனிட்டி வங்கி மூத்தக்க குடிமக்களுக்கு 9.25% p.a வட்டி விகிதத்தை வழங்குகிறது. 8.75% p.a. பொது முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும்.

ஏழு நாள்களில் இருந்து பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு வங்கி இது 4.5% முதல் 9% வரை வட்டி விகிதங்களை பொதுமக்களுக்கும், 4.5% முதல் 9.5% வரை வட்டி விகிதத்தை மூத்தக் குடிமக்களுக்கும் வழங்கும்.

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா, 3 ஆண்டுகள் வரை பல்வேறு தவணைக்காலங்களில் 50 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) வரை நிலையான வைப்பு (FD) விகிதங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

அக்டோபர் 9, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ள இது, ₹2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு பொருந்தும்.

யெஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி

இதற்கிடையில், தனியார் வங்கிகளான யெஸ் வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை ₹2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திற்கான நிலையான வைப்பு வட்டி விகிதத்தை குறைத்துள்ளன.

மேலும், இண்டஸ்இந்த் (IndusInd) வங்கி மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கி ஆகியவை அக்டோபர் 2023 இல் தங்கள் கால வைப்புகளுக்கான FD வட்டி விகிதங்களைத் திருத்தியுள்ளன.

ரெப்போ ரேட்

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தொடர்ந்து நான்காவது முறையாக அக்டோபர் 6 ஆம் தேதி வட்டி விகிதங்களை மாற்றவில்லை. பெஞ்ச்மார்க் ரெப்போ விகிதம் பிப்ரவரி 2023 முதல் 6.50 சதவீதமாக உள்ளது.

ஸ்மால் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு ஆர்.பி.ஐ உத்தரவாதம் அளிக்கும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் பேசி தெளிவு பெற்றுக் கொள்வது நல்லது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment