Advertisment

ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் உயர்வு; குட் நியூஸ் கொடுத்த பி.என்.பி வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன; புதிய வட்டி விகிதம், டெபாசிட் சேமிப்பின் காலம் உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
fixed deposit interest rates, sbi, hdfc bank, icici bank, punjab national bank, fd rates compared

இரண்டாவது முறையாக ₹.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை பஞ்சாப் நேஷனல் வங்கி உயர்த்தியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பஞ்சாப் நேஷனல் வங்கி, எஃப்டி விகிதத்தை அதிகரிப்பதாக மீண்டும் அறிவித்துள்ளது. ஜனவரி 8 முதல் இந்த  புதிய விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக ₹.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை பஞ்சாப் நேஷனல் வங்கி உயர்த்தியுள்ளது.

Advertisment

முன்னதாக, ஜனவரி 1 முதல் வட்டி விகிதங்களை உயர்த்தியிருந்தது. தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ள வட்டி விகிதங்களில் வங்கி ஒரே காலத்திற்கான விகிதங்களை 80 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) அதிகரித்துள்ளது.
முன்னதாக ஜனவரி 1 ஆம் தேதி, வங்கி சில பதவிக்காலங்களில் 45 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) வரை விகிதங்களை அதிகரித்தது மற்றும் சிலவற்றில் விகிதங்களைக் குறைத்தது.

Banking news in tamil: can withdraw up rs.3 lakh only in punjab national bank

புதிய வட்டி விகிதங்கள்

பஞ்சாப் நேஷனல் வங்கி 300 நாள்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை 6.25% லிருந்து 7.05% ஆக உயர்த்தியுள்ளது.
7 நாள்கள் முதல் பத்து வருடங்களில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு சாதாரண குடிமக்களுக்கு 3.5% முதல் 7.25% வரை வட்டி வழங்குகிறது.

அதன்படி,

  • 7 முதல் 14 நாட்கள் 3.50%
  • 15 முதல் 29 நாட்கள் 3.50%
  • 30 முதல் 45 நாட்கள் 3.50%
  • 46 முதல் 60 நாட்கள் 4.50%
  • 61 முதல் 90 நாட்கள் 4.50%
  • 91 முதல் 179 நாட்கள் 4.50%
  • 180 முதல் 270 நாட்கள் 6.00%
  • 271 நாட்கள் முதல் 299 நாட்கள் வரை 6.25%
  • 300 நாட்கள் 7.05%
  • 6.25% 301 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான காலங்களுக்கு
  • 1 ஆண்டு 6.75%
  • 400 நாட்கள் 7.25%
  • 401 நாட்கள் முதல் 2 ஆண்டுகள் வரை 6.80%
  • 2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகள் வரை 7.00%
  • 3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகள் வரை 6.50%
  • 5 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 10 ஆண்டுகள் வரை 6.50%

மூத்தக் குடிமக்கள் எஃப்.டி

சமீபத்திய திருத்தத்திற்குப் பிறகு, 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் எஃப்.டி.களுக்கு 4% முதல் 7.75% வரையிலான வட்டி விகிதங்களை PNB வழங்குகிறது.
அதே நேரத்தில், சூப்பர் சீனியர்களுக்கு 4.3% முதல் 8.05% வரை வட்டி விகிதங்கள் கிடைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits Punjab National Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment