ஆதார் கார்டு மோசடி… மொபைல் நம்பரை உடனடியாக புதுப்பிக்க அறிவுரை

ஆதார் கார்டில் உள்ள மொபைல் நம்பர் – இமெயில் ஐடி சரியாக உள்ளதா என்பதை சோதிக்கும் வழிமுறையை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

ஆதார் அட்டை அனைத்து முக்கிய விவகாரங்களுக்கும் தேவைப்படும் மிக முக்கியமான ஒரு அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, பான் அட்டை, யு,ஏ.என் ஆகியவற்றில் ஆதார் அடையாள அட்டை எண்ணை சேர்ப்பது கட்டாயம் ஆகும்.

அதன் மூலம் அரசு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும் பெற இயலும். உங்களது தனிப்பட்ட தகவல்களின் கூடாரமாக விளங்கும் ஆதார் கார்டில், பாதுகாப்பிற்காக சரியான மொபைல் நம்பரை இணைப்பது அவசியமாகும்.  இதுதொடர்பான எச்சரிக்கையை UIDAI தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த ட்வீட்டில், ” உங்களது மொபைல் எண்ணை புதுப்பித்திருந்தால் அதனை ஆதார் கார்டில் மாற்றுவது அவசியமாகும். உங்களது சரியான மொபைல் எண் அல்லது இமெயில் ஐடி ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை, : https://resident.uidai.gov.in/verify-email-mobile இந்த லிங்க் கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம” என பதிவிடப்பட்டுள்ளது.

ஆதார் சேவைகளை ஆன்லைனில் பெற, மொபைல் நம்பரை அப்டேட் செய்வது அவசியமாகும். ஆதார் கார்டுடன் புதிய மொபைல் நம்பரை, அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தை அணுகி எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
ஆதார் கார்டில் உள்ள மொபைல் நம்பர் – இமெயில் ஐடி சோதிக்கும் வழிமுறை

  • முதலில் UIDAI-யின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு  uidai.gov.in செல்ல வேண்டும்.
  • அங்கு, Aadhar Service கிளிக் செய்து, ‘Verify email/ mobile number’ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில், உங்களது 12 டிஜிட் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
  • ஆதார் கார்டில் உள்ள தகவல்களை பதிவிட வேண்டும்
  • பின்னர் captcha code வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும்
  • இறுதியாக, Send OTP ஆப்ஷனை கிளிக் செய்தால், சரியான மொபைல் நம்பர் உள்ளதா என்பதை கண்டறிய முடியும்.


ஆதார் எண்ணில் நம்பரை புதுப்பிக்க விரும்புவோர், அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம். அங்கு வழங்கப்படும் படிவத்தை பூர்த்திசெய்திட வேண்டும். நம்பர் புதுப்பிக்கும் பிராசஸ், எந்தளவில் உள்ளது என்பதை UIDAIயின் அதிகாரப்பூர்வ தளத்தில் ட்ரெக் செய்திட முடியும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Update mobile number to avoid aadhar card scam

Next Story
ரூ.35 லட்சம் ரிட்டன்; போனஸ்- கடன் வசதியும் உண்டு: போஸ்ட் ஆபீஸில் இந்த ஸ்கீமை கவனிச்சீங்களா?post office schemes
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X