/indian-express-tamil/media/media_files/2025/03/21/pHczFARxUC5gQWSLJsJA.jpg)
UPI new rules UPI payments NPCI digital payments
இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் முதுகெலும்பாக விளங்கும் யுபிஐ (Unified Payments Interface), நவம்பர் 3, 2025 முதல் புதிய பரிவர்த்தனை விதிகளைக் காண உள்ளது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிவித்துள்ள இந்த மாற்றங்கள், வாடிக்கையாளர் மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகளை மேலும் வேகப்படுத்தவும், பாதுகாப்பானதாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, யுபிஐ ஆனது ஒரு நாளைக்கு பத்து செட்டில்மெண்ட் சுழற்சிகளை (settlement cycles) RTGS (Real-Time Gross Settlement) வழியாகச் செயல்படுத்துகிறது. இந்தச் சுழற்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் (authorised transactions) மற்றும் சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள் (dispute transactions) இரண்டும் ஒன்றாகவே கையாளப்படுகின்றன. எனினும், கடந்த சில ஆண்டுகளாக யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், இந்த ஒருங்கிணைந்த முறை சில சமயங்களில் தாமதங்களை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகளைத் தனித்தனியாகப் பிரித்து கையாள என்.பி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.
புதிய செட்டில்மெண்ட் சுழற்சிகள்:
நவம்பர் 3 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் மட்டுமே தினமும் நடைபெறும் பத்து சுழற்சிகளில் (Cycle I முதல் X வரை) கையாளப்படும். அதே நேரத்தில், சர்ச்சைக்குறிய பரிவர்த்தனைகளுக்காக பிரத்யேகமாக இரண்டு புதிய சுழற்சிகள் (DC1 மற்றும் DC2) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள்:
Cycle I: நள்ளிரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை
Cycle II: நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை
Cycle III: அதிகாலை 5 மணி முதல் 7 மணி வரை
Cycle IV: காலை 7 மணி முதல் 9 மணி வரை
Cycle V: காலை 9 மணி முதல் 11 மணி வரை
Cycle VI: காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை
Cycle VII: மதியம் 1 மணி முதல் 3 மணி வரை
Cycle VIII: மாலை 3 மணி முதல் 5 மணி வரை
Cycle IX: மாலை 5 மணி முதல் 7 மணி வரை
Cycle X: மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை
சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள்:
DC1: நள்ளிரவு முதல் மாலை 4 மணி வரை
DC2: மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரை
மாற்றங்களின் முக்கிய அம்சங்கள்:
அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் தனிச் சுழற்சிகளில் கையாளப்படுவதால், பணப்பரிவர்த்தனை மேலும் விரைவாகவும், தடையின்றியும் நடைபெறும்.
சர்ச்சைக்குறிய தனிச் சுழற்சிகள், சிக்கல்களை உடனடியாக அடையாளம் கண்டு, விரைவாகத் தீர்வு காண உதவும்.
செட்டில்மென்ட் நேரங்கள், ரீகன்சிலியேஷன் அறிக்கைகள், GST அறிக்கைகள் உள்ளிட்ட மற்ற செட்டில்மென்ட் விதிகள் மாறாமல் இருக்கும்.
மற்றொரு செய்தியில், பழைய பேடிம் (@paytm UPI) ஐடி ஹேண்டில்களுடன் இணைக்கப்பட்ட அனைத்து ஆட்டோபே கட்டளைகளையும் நிறுத்துவதற்கான காலக்கெடுவை, என்.பி.சி.ஐ. இரண்டு மாதங்களுக்கு, அதாவது அக்டோபர் 31, 2025 வரை நீட்டித்துள்ளது என்று செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.