Advertisment

Google Pay உள்ளிட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடு?

இனிவரும் காலங்களில் யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) பேமெண்ட் ஆப்ஸ் மூலம் பயனர்கள் வரம்பற்ற முறையில் பண பரிமாற்றங்கள் செய்ய முடியாது.

author-image
WebDesk
New Update
UPI transaction limit and Online transaction charges

உங்களது வங்கிகளில் portfolio charges உள்ளனவா என செக் செய்து கொள்ளுங்கள்.

UPI Transaction Limit: யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் கட்டண முறைகளில் ஒன்றாகும்.

ஒரே மொபைல் பயன்பாட்டில் பல வங்கிக் கணக்குகளை இணைக்க இது உங்களை அனுமதிக்கும் என்பதால் இது பாதுகாப்பானது மட்டுமல்ல, பயன்படுத்த மிகவும் வசதியானது.

Advertisment

இந்த நிலையில், Google Pay, PhonePe, Paytm மற்றும் பிற போன்ற UPI கட்டண பயன்பாடுகள் விரைவில் பரிவர்த்தனைக்கு வரம்பை விதிக்கக்கூடும் என பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் பொருள் பயனர்கள் UPI பேமெண்ட் ஆப்ஸ் மூலம் வரம்பற்ற பணம் செலுத்த முடியாது என்பதே ஆகும். இந்த நிலையில், அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆராய ஏற்கனவே ஒரு கூட்டம் நடந்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் என்பிசிஐ அதிகாரிகள் தவிர, நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

ஆகையால், இந்த மாத இறுதிக்குள் யுபிஐ மார்க்கெட் கேப் செயல்படுத்துவது குறித்து என்பிசிஐ முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Google Pay Upi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment