Advertisment

ரூ.2 லட்சம் NEFT பரிவர்த்தனைக்கு ரூ.25 கட்டணம்?

ரூ.10,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.2.50 கட்டணமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Sumangal Rural Postal Life Insurance Scheme

மாதம் ரூ.2 ஆயிரம் சேமித்தால் லட்சாதிபதி ஆகலாம்.

வங்கிகளுக்கு இடையே NEFT பரிவர்த்தனைக்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கும் திட்டம் தயார் நிலையில் உள்ளது.
இதுவரை வங்கிகளுக்கு இடையேயான NEFT பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. இந்த நிலையில் NEFT பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Advertisment

அந்த வகையில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்;த்தனைகளுக்கு ரூ.25 வரை கட்டணம் வசூலிக்க பரிந்துரைத்துள்ளது. எனினும் தற்போதுவரை எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.

ஆன்லைன் NEFT பரிவர்த்தனைகளுக்கு சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்றும் வங்கிகளுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், NEFT தொடர்பாக புதன்கிழமை (ஆகஸ்ட் 17) வெளியான விவாத கட்டுரையில் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களின் கட்டண வரம்பை பரிந்துரைத்துள்ளது.

அதன்படி,

  1. ரூ.10,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.2.50
  2. ரூ.10,000 மற்றும் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு ரூ.5
  3. ரூ.1 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.15
  4. ரூ.2 லட்சத்துக்கும் மேலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.25

எனக் கட்டணம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த கட்டணங்கள் விவாதத்தில் உள்ளன. இவை இன்னமும் செயல்படுத்தப்படவில்லை. NEFT பரிவர்த்தனைகளைச் செயலாக்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பைச் செயல்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் வங்கிகளுக்குச் செலவு ஏற்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bank News Rbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment