Advertisment

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு!

டாலரின் மதிப்பு குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பு அதிமமாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
sbi bank atm state bank atm state bank of india

sbi bank atm state bank atm state bank of india

US dollar early trade : கடந்த சில தினங்களாகவே ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில், இன்று அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 8 காசுகள் உயர்ந்து 74.82 ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisment

ரூபாயின் இந்த அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுவது அமெரிக்க டாலருக்கு எதிரான ஆசிய நாணயங்களின் மதிப்பானது சற்று உயர்ந்ததே ஆகும். காலை தொடக்கம் முதலே 74.78 இருந்த ரூபாயின் மதிப்பு 74.82 ஆக் முடிவடைந்துள்ளது. வர்த்தகமானது 8 காசுகள் உயர்ந்து இறுதியாக 74.82 ரூபாயாக உள்ளது. டாலரின் மதிப்பு குறைந்து இந்திய ரூபாயின் மதிப்பு அதிமமாகியுள்ளது.

இன்று காலை, ஐஎஃப்ஏ குளோபல் நிறுவனத்தின் அபிஷேக் கோயங்கா அளித்த பேட்டியில், ரூபாயின் மதிப்பானது 74.79 - 75 ரூபாய் வரையில் இருக்கலாம் என தெரிவித்தார்.

மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 100 புள்ளிகள் அதிகரித்து. 37,977 ஆக வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 46 புள்ளிகள் அதிகரித்து, 11,225 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா டாலரின் மதிப்பு 0.09% அதிகரிப்பு 93.01 வீழ்ச்சி அடைந்துள்ளது.

இது ரூபாயின் மதிப்பு மேலும் ஏற்ற வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்தியா மற்றும் பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறித்த பயம் முதலீட்டாளர்கள் மத்தியில் பெருமளவில் உள்ளது. டாலர் குறியீடு 0.09 சதவீதம் சரிந்து 93.01 ஆக உள்ளது.

அமெரிக்க டாலர் இன்று தொடக்கத்திலயே வர்த்தக்கத்தில் குறைவான மதிப்புடன் தொடங்கியது. உள்நாட்டு பங்குச் சந்தையில், 30-பங்கு பிஎஸ்இ பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் 31.30 புள்ளிகள் அதிகரித்து 37,908.64 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 22.45 புள்ளிகள் முன்னேறி 11,205.85 ஆகவும் வர்த்தகம் செய்தது.

கட்டணமா? எஸ்பிஐ-யில் இனி அந்த பேச்சுக்கே இடமில்லை!

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் மூலதன சந்தையில் நிகர வாங்குபவர்களாக இருந்தனர், ஏனெனில் அவர்கள் வெள்ளிக்கிழமை ரூ .46.39 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர் என்று பரிமாற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sensex
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment