அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தை குழு செப். 16-ம் தேதி இந்தியா வருகை- வர்த்தக அமைச்சகம்

கடந்த மாதம் அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத வரிகளை விதித்த பிறகு, நேரில் நடைபெறும் முதல் வர்த்தகப் பேச்சுவார்த்தை இதுவாகும். ஆகஸ்ட் 25=ம் தேதி நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகளும் இந்த வரிகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன.

கடந்த மாதம் அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத வரிகளை விதித்த பிறகு, நேரில் நடைபெறும் முதல் வர்த்தகப் பேச்சுவார்த்தை இதுவாகும். ஆகஸ்ட் 25=ம் தேதி நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகளும் இந்த வரிகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன.

author-image
WebDesk
New Update
US India 2

ஏற்றுமதியாளர்கள் மீதான அமெரிக்க வரிகளின் அழுத்தத்தைக் குறைக்க, உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் உடனடி பணப்புழக்க நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான ஒரு தொகுப்பையும் அரசாங்கம் உருவாக்கி வருகிறது. Photograph: (File Photo)

அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைக் குழு செவ்வாய்க்கிழமை (16.09.2025) இந்தியாவுக்கு வருகை தரும் என வர்த்தக அமைச்சகத்தின் சிறப்புச் செயலர் ராஜேஷ் அகர்வால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

கடந்த மாதம் அமெரிக்கா இந்தியப் பொருட்களின் மீது திடீரென 50% வரி விதித்த பிறகு, நடைபெறும் முதல் நேரடிப் பேச்சுவார்த்தை இதுவாகும். இந்த வரிகள் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டன.

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பதிவில், இந்தியாவும் அமெரிக்காவும் "வர்த்தகத் தடைகளை சரிசெய்ய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன" என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு சில மணிநேரங்களுக்குப் பிறகு பதிலளித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, "வளமான எதிர்காலத்தைப் பாதுகாக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படும்" என்று தெரிவித்திருந்தார்.

அமெரிக்க வரிகளால் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் நெருக்கடியைக் குறைக்க, உற்பத்தி நிறுவனங்கள் எதிர்கொள்ளும் உடனடி பணப்புழக்கப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கான ஒரு திட்டத்தை அரசு வகுத்து வருகிறது.

Advertisment
Advertisements
Usa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: