'இந்தியா - அமெரிக்கா உறவில் சிக்கல்; ஆனால் இறுதியில் ஒன்றுபடுவோம்' - அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்

அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்திருந்தாலும், இரு நாடுகளின் உறவு "சிக்கலானது," ஆனால் "இறுதியில் ஒன்றுபட்டு செயல்படும்" என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.

அமெரிக்கா இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்திருந்தாலும், இரு நாடுகளின் உறவு "சிக்கலானது," ஆனால் "இறுதியில் ஒன்றுபட்டு செயல்படும்" என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
US Treasury Secretary Scott Bessent

'இந்தியா - அமெரிக்கா உறவு சிக்கலானது; ஆனால் இறுதியில் ஒன்றுபடுவோம்' - அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரியை விதித்துள்ள நிலையில், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு "சிக்கலானது" என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். ஆனால், "இறுதியில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படும்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisment

ஃபாக்ஸ் பிசினஸ் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குவது மட்டுமல்லாமல், வர்த்தக ஒப்பந்தம் தாமதமாவதுமே இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்புக்குக் காரணம் என்று அவர் கூறினார்.

"இது ஒரு சிக்கலான உறவு. அதிபர் டிரம்ப்-பிரதமர் மோடிக்கு இடையே நல்ல உறவு உள்ளது. இது ரஷ்ய எண்ணெயை மட்டும் பற்றியது அல்ல. வர்த்தக வரிக்கான பேச்சுவார்த்தையை இந்தியர்கள் முன்னதாகவே தொடங்கினர், ஆனால் எங்களுக்கு இன்னும் ஒப்பந்தம் எட்டப்படவில்லை. மே அல்லது ஜூன் மாதத்திற்குள் ஒப்பந்தம் உருவாகும் என்று நான் நினைத்தேன். ஆனால், பேச்சுவார்த்தையில் எங்களை இழுத்தடித்தனர். மேலும், ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி லாபம் ஈட்டுவதும் ஒரு முக்கிய அம்சம்," என்று பெசென்ட் கூறினார்.

"இங்கே பல மட்டங்களில் விஷயங்கள் நடக்கின்றன. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு; அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடு. இறுதியில் நாம் ஒன்றுபடுவோம் என்று நான் நம்புகிறேன். இந்தியர்கள் செய்வது பெரும்பாலும் வெளிப்படையாக காட்டிக் கொள்ளும் செயல் என நான் நினைக்கிறேன். வர்த்தகப் பேச்சுவார்த்தையின்போது நான் இதை தொடர்ந்து கூறி வருகிறேன். அமெரிக்கா ஒரு பற்றாக்குறை கொண்ட நாடு. வர்த்தக உறவுகளில் பிளவு ஏற்படும்போது, பற்றாக்குறை உள்ள நாட்டிற்கு சாதகமாக அமையும். உபரி உள்ள நாடுதான் கவலைப்பட வேண்டும். எனவே, இந்தியர்கள் நமக்கு விற்பனை செய்கிறார்கள், அவர்களுக்கு அதிக வரிகள் உள்ளன, நமக்கு அவர்களுடன் மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது," என்றும் அமெரிக்க கருவூலச் செயலாளர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment
Advertisements

அமெரிக்காவுடனான தகவல் தொடர்பு தடைபடவில்லை என்றும், வரிகளின் தாக்கத்தைக் குறைக்க அனைத்து வழிகளையும் ஆராய வர்த்தகத் துறை தொழில்துறையுடன் தொடர்பில் இருப்பதாகவும் இந்திய வர்த்தக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகஸ்ட் 25-ஆம் தேதி வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் இந்தியா வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 6-ஆம் தேதி இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து அந்தப் பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி வாஷிங்டன் சென்ற பிறகு, இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. இந்த ஆண்டின் இறுதிக்குள் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு தலைவர்களும் திட்டமிட்டிருந்தனர். இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கான விதிமுறைகளையும் (Terms of Reference - ToR) கையெழுத்திட்டிருந்தன. ஆனால், வேளாண்மை மற்றும் நடுத்தர வாகனங்களுக்கான சந்தை அணுகலை இந்தியா பாதுகாக்கும் நிலைப்பாட்டால் பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

ரஷ்ய கச்சா எண்ணெயை இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகளவில் இறக்குமதி செய்வது டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரிய எரிச்சலூட்டும் விஷயமாக உருவெடுத்துள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாதத்தில், ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அபராதமாக, ஏற்கனவே இந்தியப் பொருட்களுக்கு கடந்த மாதம் விதிக்கப்பட்ட 25% வரிக்கு மேல், மேலும் 25% கூடுதல் வரியை டிரம்ப் அறிவித்தார். இதனால் இந்தியப் பொருட்களுக்கு ஒட்டுமொத்தமாக 50% அமெரிக்க வரி புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவை குறிவைப்பது "நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று டெல்லி கூறியுள்ளது. மேலும், இந்தியாவின் பாரம்பரிய எண்ணெய் விநியோகங்கள் ஐரோப்பாவிற்கு திருப்பி விடப்பட்டதால் இந்த இறக்குமதிகள் தொடங்கின என்றும், உலக எரிசக்தி சந்தைகளின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த அமெரிக்கா "இந்தியா இத்தகைய இறக்குமதிகளை மேற்கொள்ளுமாறு தீவிரமாக ஊக்குவித்தது" என்றும் அது கூறியது.

மேலும், இந்தியாவுடன் நீடித்த வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் வாஷிங்டனுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளன. ஏனெனில், முதலில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகக் கருதப்பட்டது. அமெரிக்காவின் விவசாயம் மற்றும் பால் பண்ணை துறைகளுக்கு அதிக சந்தை அணுகல் வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு இந்தியா காட்டிய கடும் எதிர்ப்பு, பேச்சுவார்த்தைகளில் உள்ள முக்கிய தடைகளில் ஒன்றாகும்.

ரஷ்யாவிலிருந்து இறக்குமதியைக் குறைக்குமாறு இந்தியாவிற்கு அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் மீண்டும் அழுத்தம் கொடுப்பது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர க்ரெம்ளின் மீது அழுத்தம் கொடுக்கும் ஒரு வெளிப்படையான முயற்சி ஆகும். 3 ஆண்டுகளாக நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போர் சில நாட்களில் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்பும் டிரம்புக்கு, ரஷ்ய இறக்குமதிகள் குறித்து இந்தியாவிற்கு அழுத்தம் கொடுக்க இது ஒரு சரியான நேரம். ரஷ்யா தற்போது இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்குவதில் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. டெல்லியின் எண்ணெய் இறக்குமதியில் 35-40% ரஷ்யாவில் இருந்து வருகிறது. டிரம்ப் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதற்காக இந்தியாவிற்கு "அபராதமாக" கூடுதல் வரிகளை விதித்தாலும், மாஸ்கோவின் எண்ணெய் வாங்குவதில் முதலிடத்தில் உள்ள சீனாவுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களில் பெரும்பாலானவை ரஷ்ய எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுவதால், ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகள் குறித்து இந்தியாவிற்கு அழுத்தம் கொடுப்பதில் ஐரோப்பாவிடம் இருந்து அதிக உதவியை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பெசென்ட் கூறினார். "நமது ஐரோப்பிய நட்பு நாடுகள் முன்வர வேண்டும். இந்தியர்களுக்கு எதிராக அவர்கள் வரி அச்சுறுத்தல்களை விடுத்து நான் பார்க்கவில்லை. உண்மையில், ரஷ்ய எண்ணெயில் இருந்து தயாரிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை வாங்குபவர்கள் அவர்கள்தான்," என்று பெசென்ட் கூறினார். இந்தியா போன்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவுடன் 2-ம் நிலை வரிகளைப் பயன்படுத்த கனடா மட்டுமே தயாராக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

பிப்.2022-ல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தபோது, டெல்லியின் எண்ணெய் இறக்குமதியில் மாஸ்கோவின் பங்கு 2%-க்கும் குறைவாக இருந்தது. படையெடுப்பை தொடர்ந்து பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் ரஷ்ய கச்சா எண்ணெயை புறக்கணித்ததால், ரஷ்யா அதை வாங்குபவர்களுக்கு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியது. இந்த வாய்ப்பை இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் விரைவாகப் பயன்படுத்திக் கொண்டன. இதனால், பாரம்பரிய மத்திய கிழக்கு சப்ளையர்களை இடமாற்றம் செய்து, சில மாதங்களுக்குள் ரஷ்யா இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஆதாரமாக உருவெடுத்தது. உலகளவில் எரிசக்தி விலைகள் உயர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, ரஷ்ய எண்ணெயை அதிகமாக வாங்கும்படி அமெரிக்கா இந்தியாவை ஊக்குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பொதுத்துறை சுத்திகரிப்பு நிறுவனங்கள், ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகள் குறித்து அரசிடமிருந்து எந்த வழிகாட்டுதலும் பெறவில்லை என்றும், மாஸ்கோவின் கச்சா எண்ணெயை வாங்குவது பொருளாதார மற்றும் வணிகக் காரணங்களால் தொடர்ந்து நிர்ணயிக்கப்படுகிறது என்றும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளன. தடைக்கு உட்படாத எண்ணெய் எங்கிருந்து சிறந்த விலையில் கிடைக்குமோ, அங்கிருந்து வாங்குவோம் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கிறது. ரஷ்ய எண்ணெய் தடை செய்யப்படவில்லை; அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் விதித்த விலை வரம்புக்கு உட்பட்டது. அந்த எண்ணெய் கொண்டு செல்ல மேற்கத்திய கப்பல் மற்றும் காப்பீட்டு சேவைகள் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே அந்த விலை வரம்பு பொருந்தும். ரஷ்ய எண்ணெய்க்கு விதிக்கப்பட்டுள்ள விலை வரம்பை இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களும் அரசும் பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளன.

பிரிக்ஸ் (BRICS) நாடுகளுடன் டாலருக்குப் பதிலாக ரூபாயில் வர்த்தகம் செய்ய இந்தியா முயற்சிப்பது குறித்து கவலைப்படுகிறீர்களா என்று கேட்டபோது, "நான் கவலைப்படும் பல விஷயங்கள் உள்ளன. ரூபாய் இருப்பு நாணயமாக மாறுவது அதில் ஒன்று அல்ல. அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் எல்லா காலத்திலும் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மதிப்பில் உள்ளது என நான் நினைக்கிறேன்," என்று பெசென்ட் கூறினார்.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: