தொழில் தொடங்க எல்லோருக்கும் விருப்பம் இருக்கும். ஆனால் ஒரு தொழிலைத் தொடங்குவது அத்தனை எளிதானது அல்ல. தொழில் செய்வதற்கான திட்டமிடல் மிக அவசியம். அதுவும் நாம் தொழிலுக்காக செலவழிக்கக் கூடிய நேரம், அதில் முதலீடு செய்யப்படும் பணம் மற்றும் அதிலுள்ள ஆபத்துகள் போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.. இதற்கு நம்மிடம் இருக்கும் தொழிலுக்கான ஐடியாவைப் பொறுத்து முறையான திட்டமும் சரியான நிதித் தகவலும் தேவைப்படும்.
மேலும், ஒரு பெண் ஒரு புதிய தொழிலைத் தொடங்குவது மிகவும் எளிதானது அல்ல, ஏனெனில் அவர்கள் வியாபாரத்தையும் வீட்டையும் கவனித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளதால் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம். ஆனாலும் வணிக நடவடிக்கைகளில் நம்மிடையே சாதனை புரிந்த பெண்களும் உள்ளனர். இதனால் அவர்களைப் பின்பற்றி பெண்கள் தெளிவான திட்டமிடலோடு தொழில் தொடங்கினால் சாதிக்கலாம்.
ஏற்கனவே வெற்றிபெற்ற பெண் தொழில்முனைவோரிடமிருந்து, எந்தவொரு தொழிலையும் எப்படி தொடங்குவது, நம் தொழிலுக்கான ஐடியாவை மேம்படுத்துவது, எவ்வளவு முதலீடு செய்வது அதை எவ்வாறு நிர்வகிப்பது, தொழிலுக்காக நாம் ஒதுக்கும் நேரம் மற்றும் நாம் நிர்ணயித்த இலக்குகளை அடைவது, ஆகியவற்றை கற்றுக்கொள்வது மிக முக்கியம்.
தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கான சில குறிப்புகள்
பொருளாதார திட்டம்
தொழிலுக்காக செய்யக்கூடிய செலவுகளையும், வீட்டுச் செலவுகளையும் கண்காணிக்க வேண்டும். நீங்கள் பணத்தை சேமிக்கக்கூடிய பகுதிகளில் கவனம் செலுத்துங்கள். மேலும், செலவினங்களையும் கண்காணிக்க வேண்டும். அதற்காக நீங்கள் ஒரு பண நாட்குறிப்பைப் பயன்படுத்தலாம், ஏனெனில் இது செலவினங்களைக் கண்காணிக்க உதவும். அடுத்ததாக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
வணிக கடன்
சரியான நேரத்தில் பில்களை செலுத்த வேண்டும், நிதிப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். மேலும், வணிகத்திற்கான பாதுகாப்பற்ற கடன்களைத் தவிர்ப்பதற்கும், கிரெடிட் கார்டுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. வணிக கடனுக்கு நல்ல கடன் மதிப்பெண் முக்கியம். வங்கிகள் மற்றும் என்.பி.எஃப்.சி. வங்கிகளால் வழங்கப்படும் வணிக கடன்களில் பெண்களுக்கு பல சிறப்பு வணிக கடன் திட்டங்கள் உள்ளன.
அவசர நிதி
திடீர் மற்றும் அவசரகால பயன்பாட்டிற்கு என தனியாக அவசர நிதியை பராமரிப்பது முக்கியம்.
ஓய்வூதிய திட்டமிடல்
ஓய்வூதியத் திட்டமிடல் என்பது நிதித் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். ஓய்வூதிய சேமிப்பை எந்த சூழ்நிலையிலும் வணிகத்தில் முதலீடு செய்ய வேண்டாம். ஓய்வூதியம் மற்றும் பிற நிதி இலக்குகளுக்காகவும் முதலீடு செய்யுங்கள்.
வணிகம் மற்றும் தனிப்பட்ட செலவுகளை தனித்தனியாக வைத்திருங்கள். வணிகம் மற்றும் தனிப்பட்ட செலவுகளை ஒருபோதும் கலக்காதீர்கள். தனிப்பட்ட மற்றும் வணிக நிதிகளுக்காக நீங்கள் இரண்டு தனித்தனி வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது சிறந்தது.
முதலீடு
நீங்கள் வணிகத்திலிருந்து நல்ல லாபம் ஈட்டினால், அதை உங்கள் வங்கிக் கணக்கில் வைப்பதற்கு பதிலாக பணத்தை திரவ நிதிகளில் முதலீடு செய்யலாம். முதலீட்டிலிருந்து கிடைக்கும் இந்த கூடுதல் வருமானங்கள் பிற தேவைகளுக்கு பயன்படுத்தப்படலாம். அபாயங்களைக் குறைக்க, உங்கள் போர்ட்ஃபோலியோவில் பன்முகத்தன்மையைப் பேணுவது முக்கியம், எனவே பங்குகள், பரஸ்பர நிதிகள், பிபிஎஃப் போன்றவற்றில் முதலீடு செய்ய முயற்சிக்கவும்.
மேலும், செலவு மற்றும் முதலீடு தொடர்பான சிறந்த செயல்பாடு மற்றும் வழிகாட்டுதலுக்காக நிதித் திட்டமிடுபவர்களிடமிருந்து ஆலோசனையைப் பெறலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil