புதிய தொழில் திட்டங்களுக்கு டிஜிட்டல் ஒப்புதல் : இந்தியாவின் முதல் மாநிலம் உ.பி!

உலகின் எந்த மூளையில் இருந்து கொண்டும், தற்போது உத்திர பிரதேச மாநிலத்தில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கவும், அனுமதி பெறவும் முடியும்.

up invester meeting

ஆர்.சந்திரன்

புதிதாகத் தொடங்க முயலும் தொழில் திட்டங்களுக்கு முற்றிலும் டிஜிட்டல் முறையில் ஒப்புதல் தருவதில் முதல் மாநிலம் என்ற அந்தஸ்த்தை உத்திர பிரதேசம் பெறுகிறது.

அம்மாநிலத்தில் பிப் 21ம் தேதி நடந்த உபி முதலீட்டாளர் மாநாட்டில் இதற்காக நிவேஷ் மித்ரா என்ற பெயரில் தனியாக ஒரு டிஜிட்டல் ஒற்றைச் சாளரம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த சாளரம் அம்மாநிலத்தின் 20 வெவ்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் என சொல்லப்படுகிறது. இதன்மூலம் எந்த நேரத்திலும், மனித குறுக்கீடுகள் எதுவும் இன்றி, 70 விதமான ஒப்புதல்களைப் பெற முடியும் என அம்மாநில அடிப்படை கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி துறை ஆணையர் அனுப் சந்திர பாண்டே தெரிவித்துள்ளார்.

எனவே, உலகின் எந்த மூளையில் இருந்து கொண்டும், தற்போது உத்திர பிரதேச மாநிலத்தில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கவும், அனுமதி பெறவும் முடியும். தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களின் விவரங்களை இந்த ஒற்றை சாளரத்தில் அளித்துவிட்டால், மற்ற அனைத்தும் தானாகவே நடந்து முடியும் என்றும் கூறப்படுகிறது.

Get the latest Tamil news and Business news here. You can also read all the Business news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Uttar pradesh becomes 1st indian state to clear projects digitally

Next Story
மந்த நிலையில் முடிந்த இந்திய பங்குசந்தைindia-stock-market
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com