பிள்ளையார் சுழி போட்ட ரூ. 25,000... இன்று ரூ. 300 கோடி டர்ன் ஓவர்; உ.பி பிரதர்ஸ் பிசினஸ் சாம்ராஜ்யத்தை உருவாக்கியது எப்படி?

உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், நான்கு நவீன தொழிற்சாலைகளை நடத்தி சுமார் 200 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது.

உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், நான்கு நவீன தொழிற்சாலைகளை நடத்தி சுமார் 200 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது.

author-image
WebDesk
New Update
Gupta brothers

தொழில் தொடங்க கோடிக்கணக்கில் முதலீடு தேவைப்படும் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், திறமை மற்றும் உழைப்பு இருந்தால் ரூ. 25 ஆயிரத்தை முதலீடாக கொண்டு பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க முடியும் என்பதற்கு இரு சகோதரர்கள் எடுத்துக்காட்டாக உள்ளனர். அவர்களின் வெற்றிக் கதையை இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.

Advertisment

உத்தர பிரதேசத்தின் புலாந்த்ஷர் அருகே உள்ள குலாவ்தி என்ற சிறிய நகரத்தில், சஞ்சீவ் மற்றும் ராஜீவ் குப்தா சகோதரர்கள் பிறந்து வளர்ந்தனர். அங்கு அவர்களின் தந்தை ஒரு சிறிய மளிகை கடை நடத்தி வந்தார். தந்தையின் தினசரி போராட்டங்களை கண்டது, சகோதரர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், அதிலிருந்து ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்ட வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது.

அவர்கள், மொத்த விற்பனையாளர்களிடமிருந்து ஏர் கூலர்களை கடனுக்கு வாங்கி, சிறிய லாபத்திற்கு விற்று தங்கள் பயணத்தை தொடங்கினர். ஆரம்ப நாட்களில், இருவரும் ஒரு ஸ்கூட்டரில் ஃபரிதாபாத்தில் உள்ள டீலர்களை சந்திக்க வீடு வீடாகச் சென்றனர். அவர்களின் முயற்சிகள் பலனளிக்க தொடங்கியதும், ஒரு சிறந்த வாகனத்தில் முதலீடு செய்தனர். இது ஒரு நீண்ட பயணத்தின் முதல் சிறிய மைல்கல்லைக் குறிப்பதாக அமைந்தது.

1992 ஆம் ஆண்டில், தங்கள் நண்பர்களிடமிருந்து ரூ. 25,000 கடன் வாங்கி, தங்களது அடுத்தகட்ட நகர்வுக்கு தயாராகினர். அவர்கள் சொந்தமாக கூலர்களை உற்பத்தி செய்யத் தொடங்கினர்.  மேலும், தங்கள் பிராண்டான சம்மர்கூல் (Summercool)-ஐ அறிமுகப்படுத்தினர். அவர்களின் முதல் கூலர் ரூ. 1,600 க்கு விற்கப்பட்டது. ஆரம்பத்தில், வாடிக்கையாளர்கள் மற்றும் பெரிய சில்லறை விற்பனையாளர்களின் நம்பிக்கையை பெறுவது கடினமாக இருந்தது. பலரும் அறியாத பிராண்டின் பொருட்களை வாங்க தயங்கினர்.

Advertisment
Advertisements

இருப்பினும், இந்த கூலர்கள் மலிவு விலையில், நம்பகத்தன்மையுடன் இருந்ததால், வாய்மொழி விளம்பரங்கள் மூலம் நல்ல வரவேற்பை பெற்றன. மெதுவாக ஆனால் உறுதியாக, இந்த பிராண்ட் வாடிக்கையாளர் நம்பிக்கையை பெற்றது. பத்து ஆண்டுகளுக்குள், சம்மர்கூல் ஆண்டுக்கு 50 மடங்கு வேகத்தில் வளர்ந்தது. இது தரம் மற்றும் விற்பனைக்கு பிந்தைய சேவையில் அவர்கள் கவனம் செலுத்தியதற்கான சான்றாகும்.

2005 ஆம் ஆண்டில், ஒரு உற்பத்தி பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டது. ஆனால், அவர்கள் கட்டி எழுப்பிய நற்பெயரின் காரணமாக, விநியோகஸ்தர்கள் முன்கூட்டியே பணம் செலுத்தி உதவினர். மேலு,ம் சப்ளையர்களும் கடன் நீட்டிப்பு வழங்கினர். இந்த அசைக்க முடியாத ஆதரவு குப்தா சகோதரர்கள் தங்கள் செயல்பாடுகளை விரைவாக மீட்டெடுக்க உதவியது. இன்று, சம்மர்கூல் ஒவ்வொரு மாதமும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. இவர்களின் வணிக மாதிரி இன்றும் எளிமையாகவே உள்ளது. இவர்களின் விற்பனையில் 90% ஆஃப்லைன் சில்லறை விற்பனை வழியாகவே வருகிறது.

காலப்போக்கில், அவர்களின் தயாரிப்பு பட்டியல் ஏர் கூலர்களை தாண்டி விரிவடைந்தது. இன்று, இந்த பிராண்ட் சீலிங் ஃபேன்கள், எக்ஸாஸ்ட் ஃபேன்கள், ரூம் ஹீட்டர்கள், எல்.இ.டி டிவிகள், சமையலறை உபகரணங்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை வழங்குகிறது. உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம், நான்கு நவீன தொழிற்சாலைகளை நடத்தி சுமார் 200 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது. 17 மாநிலங்களில் 250 விநியோகஸ்தர்களுடன் செயல்படும் இவர்களின் தயாரிப்புகள் இந்தியா முழுவதும் சுமார் 4,000 கடைகளில் கிடைக்கின்றன. அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் சந்தைகள் இப்போது அவர்களின் ஒட்டுமொத்த வணிகத்திற்கு சுமார் 10% பங்களிப்பை அளிக்கின்றன.

Business

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: